கணவன்-மனைவியிடையே குறைந்துபோன பேச்சுவார்த்தை! செல்போன் பேராபத்து....
கோப்புப்படம் மாடர்ன் உலகத்தில் இணையதள பயன்பாடு தவிர்க்க முடியாத ஓன்றாக உள்ளது. எப்போதும் செல்போன், லேப்டாப் மூலம் இணையத்தில் மூழ்கி கிடப்பதே அனிச்சையான செயலாகவும் மாறி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப், டுவீட்டர், இண்டாஸ்கிராம் என தொடர்ந்து இணையத்தில் நம்மை கட்டிப்போடும் விசயங்கள் ஏராளம். இதனால் பெரும்பாலான நேரம் நம்முடைய வாழ்நாளில் வீணாக கழிந்து வருகிறது. முக்கியமாக அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என மனித உறவுகளிடம் பேசும் நேரம் சுருங்கி வருகிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி நம்மிடையே ஏற்பட்டு வருவதே நிதர்சன உண்மையாக உள்ளது.
முக்கியமாக குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட இணையம் பயன்பாடு முக்கிய காரணியாக உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் வந்ந உடன் கணவர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை எடுத்து உட்கார்ந்தால், மனைவி கோபத்தின் உச்சிக்கு சென்று கையில் கரண்டி எடுத்து ருத்ரதாண்டவம் ஆடுவது நிச்சயம். இல்லையெனில் சமையலில் கோபத்தை காட்டுவர். பெரும்பாலான வீடுகளில் கணவர்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவதில்லை. இதனால் எந்த ஈர்ப்பும் இல்லாமல் மிஷின் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
ஓரு நாளில் அலுவலக பணி மற்றும் தூக்கம் என பெரும்பாலான நேரம் செலவாகிறது. ஓரிரு மணி நேரம் மட்டுமே குடும்பத்துடன் செலவிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்நேரத்தில் கூட செல்போன், லேப்டாப் சகிதம் என உட்கார்ந்து விட்டால், நம்முடைய சந்தோசத்தை நாமளே குழி தோண்டி புதைக்கிறோம்.
செல்போன் நோண்டுவதை விட்டு மனைவிடம் குடும்ப வரவு செலவு, குழந்தை வளர்ப்பு, உடல்நிலை, குடும்ப உறவு சிக்கல்கள் என மனம் விட்டு பேசி சிரித்தால் கணவன் மனைவி இடையேயான ஈர்ப்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
தாம்பத்திய வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்கும். இந்த சூழல் இல்லையெனில் விவாகரத்து வரை கூட செல்ல வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக, பரபரப்பான வாழ்க்கை சூழலில் முடிந்தவரை கிடைக்கும் நேரங்களில் குழந்தைகளிடம் செலவிட வேண்டும். அவர்களுடன் விளையாடுவது, பாடங்கள் சொல்லி கொடுக்க வேண்டும். அந்நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் ஆபத்தை அறியாமல் செல்போன், லேப்டாப்களை வைத்து விளையாட குழந்தைகள் விரும்புவர். கொடுக்கவில்லை எனில் அடம் பிடிப்பர். அழுகையை நிறுத்துவதற்காக செல்போன், லேப்டாப்களை கொடுத்தால், நோய்களும் வேகமாக வந்து ஓட்டிக் கொள்ளும்.
அதனால் வீட்டில் முடிந்தவரை செல்போன், லேப்டாப்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இணையம், தொழில்நுட்பங்கள் வாழ்வினை எளிதாக்குவதற்காதத்தான் தவிர தொலைப்பதற்காக அல்ல.

அதனால் வீட்டில் முடிந்தவரை செல்போன், லேப்டாப்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இணையம், தொழில்நுட்பங்கள் வாழ்வினை எளிதாக்குவதற்காதத்தான் தவிர தொலைப்பதற்காக அல்ல. Thanks Tamil Eenadu India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக