ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

தீராத சளி மற்றும் இருமலை குணமாக்கும் அற்புத மூலிகை!

தீராத சளி மற்றும் இருமலை குணமாக்கும் அற்புத மூலிகை!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது.பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.இந்தியாவில் மிதவெப்பம் மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது.வெற்றிலையில் கால்சியம்,இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தலாம்.
விஷக்கடி குறைய நாள்பட்ட விஷக்கடிக்கு வெற்றிலையையும்,மிளகையும் சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் விஷத்தன்மை மாறும்.வயிற்றுப் பொருமல் குணமாக வெற்றிலை,ஓமம் இவைகளை இடித்து சாறு பிழிந்து அதனுடன் தேனை கலந்து குடித்து வந்தால் வயிற்று பொருமல் குணமாகும்.கம்பளிப்பூச்சி கடி குணமாகவெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்த்து வந்தால் கம்பளிப்பூச்சி கடி குணமாகும்.நெஞ்சு வலி குறைய திடீர் என தோன்றும் நெஞ்சு வலிக்கு கஸ்தூரி மஞ்சளை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.
கணுக்கால் கட்டி குறையவசம்பு,மஞ்சள்,சுக்கு,சித்தரத்தை இவைகளை எடுத்துப் பொடித்து வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி குறையும்.காலில் முள் குத்திய வலி குறையவெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி தணலில் காட்டி சூட்டோடு காலில் முள் குத்திய இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.தேமல் குணமாகவெற்றிலை,வெள்ளைப்பூண்டு இவைகளை சேர்த்து மை போன்று அரைத்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி பின் குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் தேமல் விரைவில் குணமாகும்.
நகச்சுற்று குறையசாதத்துடன்,உப்பு,வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து வெற்றிலையில் வைத்து கட்டி வந்தால் நகச்சுற்று குறையும்.கொழுந்து வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டி வந்தால் நகச்சுற்று குணமாகும்.இரைப்பு குறையவெற்றிலைச் சாறு,மிளகு,சுக்கு இவைகளை அரைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இரைப்பு குறையும்.ஆஸ்துமா,சுவாச நோய்கள் குறைய மிளகை, மோர் மற்றும் வெற்றிலைச்சாறில் ஊறவைத்து பிறகு காய வைத்து பொடி செய்து காலை,மாலை இரண்டு வேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா,சுவாச பிரச்சனைகள் நீங்கும். Thanks Tamil Truth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக