ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

நோய்கள் வராமல் இருக்க இந்த ஜுஸை மட்டும் குடியுங்கள்

நோய்கள் வராமல் இருக்க இந்த ஜுஸை மட்டும் குடியுங்கள்.


கறிவேப்பிலை ஜூஸ் செய்யும் முறை:-
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதனுடன் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிக்கட்டி நீரை தனியாக பிரித்து கொள்ள வேண்டும். கிடைக்கும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து சிறு சிறு உருண்டையாக செய்து அதை அப்படியே மோருடன் கலந்து குடிக்கலாம்.
கறிவேப்பிலையை நீரில் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் சீரக பொடி மற்றும் கறிவேப்பிலை பொடி இரண்டையும் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் போதும் உடலின் பல பிரச்சனைகள் நீங்கும்.
கறிவேப்பிலை ஜீஸின் பயன்கள்:
கறிவேப்பிலையில் பலவிதமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக சொன்னால் கண், முடி மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் பாதுகாக்கும். இப்போது கறிவேப்பிலை சாறினை குடித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த ஜூலை குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறைந்து , அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
முடியின் வளர்ச்சி அதிகரிக்கும், முடி நன்கு கருமையாகவும் மாறும்.
கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறும், மேலும் கறிவேப்பிலையில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி, கல்லீரலலை பாதுகாக்கும், சீராக செயல்பட வைக்க உதவும்.
உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.
அதிகாலையில் இந்த ஜூஸை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் நீங்கி விடும். Thanks isakki 5555

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக