வியாழன், 5 ஏப்ரல், 2018

இரவு நேரத்தில் என்னுடைய மார்பகத்தில் இருந்து தானாகவே பால் கசிகிறது? இதற்க்கு நான் செய்வது?


இரவு நேரத்தில் என்னுடைய மார்பகத்தில் இருந்து தானாகவே பால் கசிகிறது?இதற்க்கு நான் செய்வது?

இவ்வாறு இரவு நேரத்தில் பால் கசிவது சாதாரணம்.இரவு நேரத்தில் உங்கள் குழந்தை ஆழ்ந்து உறங்கும்.நீங்கள் நிம்மதியாக ஓய்வேடுப்பீர்கள்.இந்த நேரத்தில் உங்களுடைய மார்பகங்கள் இயற்கையாகவே அதிகமான பாலை சுரக்கும்.பாலை சுரப்பதன் காரணமாகத்தான் பால் வெளியே கசியும். இந்த கசிவை தவிர்ப்பதற்காக தான் ‘நர்சிங் பிரா ‘என்று சொல்லக்கூடிய பஞ்சு வைத்த பிராக்களை அணிவது நல்லது.


என்னுடைய மார்பகங்கள் நிறைந்து விட்டது போன்று உணர்வு ஏற்படுகிறது .இதற்கு என்ன செய்வது ?

இவ்வாறு மார்பகங்கள் நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பு.பொதுவாக குழந்தை பிறந்த இரண்டாம் நாள் முதல் நான்காவது நாள் வரை ஏற்படுவது இயல்பு .மார்பகத்திலே இரத்த ஓட்டம் அதிகமாகும்பொது பால் சுரப்பு உள்ளேவரும்.இதற்கு ‘என்கர்ஜ்மேண்ட்’என்று பெயர்.பால் அதிகமாக சுரந்து மார்பகம் பொருந்திருப்பது போலவும்,வலியுடன் தெரியும்.மார்பகத்தினுடைய காம்பு கூட வீங்கிருக்கும்.இதனால் குழந்தைக்கு அதைப்பற்றி பால் குடிப்பது கடினமாக இருக்கும்.இப்படி இருந்தால் இரண்டு மார்பகங்களையும் வெந்நீரால் கழுவலாம்.அல்லது வெந்நீர் ஒத்தடம் குடுக்கலாம்.


இது போதுமானதாக இல்லாவிட்டால் மார்பகத்தில் இருந்து பாலை கரந்து வெளியேற்றிவிடுங்கள்.முழுவதுமாக அகற்றாமல் போதுமான அளவிற்கு வெளியேற்றுங்கள்.அவ்வப்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் குழந்தைக்கு பால் புகட்டுங்கள்.பால் புகட்டிக் கொண்டிருக்கும்போதே மார்பகத்தை நன்றாக மசாஜ் செய்து கொண்டே கொடுத்தால் பால்சுரப்பு அதிகமாகும்.பால்கட்டிக்கொள்வது குறைபாடும்.தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு பாரசிட்டமால் எடுத்துக்கொள்வது நல்லது.

Dr Jeyarani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக