புதன், 11 ஏப்ரல், 2018

கருவளையம் மறைய இதை விட சிறந்த வழி வேறில்லை.

கருவளையம் மறைய இதை விட சிறந்த வழி வேறில்லை.


இன்றைய நாகரீக உலகில் நிறைய பேருக்கு கண்களை சுற்றியும் கருமையாக வளையம் போன்று காட்சி அளிப்பது பொதுவாகி விட்டது. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இது அதிகமாகி விட்டது. இது போதிய ஊட்டச்சத்து இன்மை, மற்றும் அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் இது மாதிரியான கருவளையம் வருகின்றன.

இந்த கருவளையம் வருவதால் முகம் சற்று பொழிவு இழந்து முதுமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு கண்ட கண்ட கிரிம்களை போட்டு முகத்தை கெடுக்காமல் இயற்கையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கருவளையத்தை போக்கி முகத்தை பொழிவாக்க முடியும். இதற்கு இந்த பதிவை முழுமையாக படிங்க.
தீர்வு 1 
புதினா இலை அறைத்து சிறிது பேஸ்ட் போன்று செய்து கண்களை சுற்றி தினமும் தடவி வந்தால் கருவளையம் கருப்பு நீங்கி முகம் பளிச்சென்று காட்சியளிக்கும். இதை கருவளையம் நீங்கும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

தீர்வு 2 
உருளைக்கிழங்கை அறைத்து அதில் வரும் சாற்றை காட்டனில் எடுத்து கண்களை சுற்றி தடவி ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கும்.
தீர்வு 3
கடலை மாவில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போன்று செய்து கருவளையம் மேல் தினமும் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும். இங்கே சொல்லப்பட்ட ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வர கருவளையம் முற்றிலும் நீங்கி முகம் பளிச்சென்று மாறுவது நிச்சயம்.

இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கவும். நன்றி வணக்கம். Thanks Trending Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக