ஒரே மாதத்தில் முடி பயங்கரமாக வளர எளிய செய்முறை. வெட்ட வேண்டியிருக்கும்.
முடி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். காரணம் நம்முடைய அழகை பல நேரங்களில் முடியே தீர்மானிக்கிறது. தற்போது பலரும் இளம் வயதிலேயே வலுக்கை விழுதல் முடி கொட்டுதல் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் அன்றாடம் சந்த்திது வருகிறோம் அதற்கான காரணமாக காற்று மாசுபாடு உணவுமுறை வாழ்க்கை முறை ஆகியவையே சொல்லபடுகின்றன.
செய்முறை: நான்கு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். பின் சிறிது நீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின் ஒரு வடிகட்டியை கொண்டு அதை வடிகட்டவும். அந்த வடிகட்டிய தண்ணீருடன் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய்யை சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த நீரை உங்கள் தலையில் தடவி பின் இருபது நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடி முழுவதும் நன்றாக தேய்த்து விடவும். இதை தொடர்ந்து செய்யும்போது ஒரே மாதத்தில் உங்கள் முடி அடர்த்தியுடன் கருப்பாக மாறிவிடும் வீட்டிலேயே செய்யும் எளிய முறை இது.
இது மட்டுமில்லாமல் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யை சிறிது சூடாக்கி உங்கள் தலையில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு பின் வெது வெதுப்பான நீரில் உங்கள் தலையை கழுவினால் உங்கள் முடி எளிதில் பலம் பெற்றுவிடும். இந்த முறையை ஒரு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
இவ்வாறான எளிய முறைகளில் உங்கள் முடியை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இந்த இயற்கை முறைகள் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது. Thanks Tamil Cheese.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக