பப்பாளி விதை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.
பப்பாளி எப்படி உடலுக்கு அதிக அளவு றன்மை தருகிறதோ அதே போல் தான் பப்பாளி விதையும் உடலுக்கு நன்மை தருகிறது. பப்பாளி விதையில் அதிகளவு மெக்னீசியம், கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பேட் போன்ற சத்துகள் உள்ளன. ஆனால் நாம் இவ்வளவு சத்துள்ள விதையை எளிதாக வெளியே தூக்கி எறிகிறோம். இதன் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பப்பாளி விதை சிறிது காரம் மற்றும் மிளகு சுவை உடையது. இதனை உண்ண பப்பாளி விதையை எடுத்து நீரில் நன்கு அலசி பின் வெயிலில் காயவைத்து பொடியாக்கி உண்ண வேண்டும்.
உடல் அழகு:
இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் இது உடல் அழகை பராமரிக்கும் காவலனாய் உள்ளது. இதனை உண்பதால் முகத்தில் சுருக்கத்தையும் வயது முதிர்வையும் தடுக்கும்.
உடலின் நச்சுதன்மை:
பப்பாளி விதையை உண்பதால் சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சு பொருள்களை குறைக்கும் என சில ஆய்வுகள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.
வலி நிவாரணி :
பெரும்பாலும் வலி மற்றும் அழற்சி மற்றும் பிற நாள்பட்ட கட்டிகள் தொடர்பான ஒரு இயற்கை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது நல்ல தீர்வாக அமைகிறது.
நோய் எதிர்ப்பு :
இந்த விதைகளில் காணப்படும் பினாலிக் மற்றும் ஃபிளாவோனாய்டுகள் போன்றனவ நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையை அதிகரிக்கும்.
புற்றுநோய் :
பப்பாளி விதைகளில் நோய்த்தடுப்புக் கூறுகள் உள்ளது என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது, இது சில வகையான புற்றுநோய்களை தடுக்க அல்லது குறைக்க முடியும் என கண்டறிந்துள்ளது.
கவனம் :
இந்த விதைகளை இரண்டு வாரதிற்கு இரு முறை தான் உண்ண வேண்டும். இதனை இரத்த கொதிப்பு மற்றும் கர்பினி பெண்கள் உண்ண கூடாது. Thanks isakki 5555
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக