சனி, 5 மே, 2018

அசிங்கமான தேமலை போக்கும் நாட்டு வைத்தியம்!!

அசிங்கமான தேமலை போக்கும் நாட்டு வைத்தியம்!!

திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தை சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு மூலிகைத்தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
தேமல், வயிற்றுக்கோளாறுகள், விலா எலும்பு வலி, இளைப்பு நோய், நீர்க்கோவை இவ்வாறான பல நோய்களுக்கு மருந்தாகிறது திப்பிலி.இது சளித்தொல்லைக்கும் சிறந்தவொரு நிவாரணமாகும். திப்பிலியின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்தும் அறியாத பல விடயங்கள் உண்டு.திப்பிலி இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது.

திப்பிலி பொடியினை தேனோடு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டை கமறல் சரியாகும்.திப்பிலியை தூளாக்கி தேனுடன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் சரியாகும்.திப்பிலி இளைப்பு நோய்க்கும் சிறந்தவொரு மருந்தாக காணப்படுகின்றது. திப்பிலி பொடியுடன் கடுக்காய் பொடியும் சம அளவு கலந்து தேனுடன் இலந்தை பழ அளவு சாப்பிட்டு வரவேண்டும். இதை நாள்தோறும் இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பை நோய் குணமாகும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.திப்பிலியை சிறிதளவு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் பசியின்மை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். Thanks TIME PASS NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக