சனி, 5 மே, 2018

பெண்களே உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா இதோ 5 சூப்பர் யோசனைகள்

பெண்களே உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா இதோ 5 சூப்பர் யோசனைகள்



திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்'. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே!அதிலும், மணப் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிகமாகவே ஆசைப்படுவார்கள். இது இயல்புதான். அதே நேரத்தில், சில பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே வயிறு தொப்பை போட்டிருக்கும். எவ்வளவோ உடற்பயிற்சி செய்தாலும், டயட்டில் இருந்தாலும் தொப்பை மட்டும் குறையவே குறையாது. எந்த உடை போட்டுக் கொண்டாலும் அவர்களுடைய தொப்பை மட்டும் எப்படியாவது வெளியே தெரிந்து விடும்.

மிகவும் டைட்டாக மற்றும் பட்டையாக இருக்கக் கூடிய எலாஸ்ட்டிக் டிசைன் கொண்ட உள்ளாடையை, அதாவது ஸ்பெஷலான ஜட்டியை, அன்று ஒரு நாள் மட்டும் அணிந்து கொள்ளுங்கள். திக்கான அந்த எலாஸ்ட்டிக், உங்கள் தொப்பை மற்றும் இடுப்பை சமமாகக் காட்டும். எலாஸ்ட்டிக்கின் இறுக்கத்தினால், தொப்பையும் ஓரளவு உள்ளே அமுங்கும். தேவைப்பட்டால் பெல்லி-பாண்டுகளையும் போட்டுக் கொண்டு தொப்பையை இறுக்கிக் கொள்ளலாம்.

தொப்பையைச் சுற்றிலும், அடுத்தவர்களின் கண்களைக் கவரும் வண்ணம் பலவிதமான வேலைப்பாடுகள் அடங்கிய அலங்காரங்களைச் செய்து கொள்ளலாம். ஆங்காங்கே சிறுசிறு குஞ்சரங்களைத் தொங்க விடலாம்; பாசி மணிகளைக் கோர்த்து விடலாம்; முக்கியமாக, கொஞ்சம் இறுக்கமான ஒட்டியாணம் அணிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் பார்வை முழுவதும் இந்த அலங்காரங்களில் இருக்கும் போது, தொப்பை எங்கே தெரியப் போகிறது? Thanks Alageaa arive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக