புதன், 9 மே, 2018

இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசிக்க கண் அவசியமல்லவா.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசிக்க கண் அவசியமல்லவா......


வணக்கம் நண்பர்களே....நாம் இந்த பதிவில் பார்க்க போகும் தலைப்பு நம்மால் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசித்து மகிழ இன்றியமையாததாக திகழும் கண்களை பற்றித்தான் பார்க்ஜ போகிறோம்.கண்களை எவ்வாறு பாதுகாப்பது,எவ்வாறு பராமரிப்பது என்பதற்கு ஒரு சில விஷயங்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
என் என்றால் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் கண்ணாடி அணிந்ததில்லை.யாருக்கும் கிட்ட பார்வை,தூர பார்வை ,மாலைக்கண்நோய் போன்ற கண் நோய்கள் யாவும் அவர்களை நெருங்கவில்லை.ஆனால் இன்று நடக்கும் அனைத்தையும் நீங்களே அறிவீர்கள். நல்ல சொல்ல தேவை இல்லை இருந்தாலும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.இன்றைய தலைமுறையில் 10 வயது முடிவுரா குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் சூழல் நிலவுகிறது.இதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்தால் காரணம் யாருமே இல்லை.பின் எப்படி இந்த கண் நோய்கள் இந்த தலைமுறைகளை இவ்வளவு எளிதில் தாக்குகிறது என்று யோசிக்கலாம் நீங்கள்.ஆம் இதற்கு நாம் யாருமே காரணம் இல்லை.இதற்கு எல்லாம் முக்கிய காரணம் நவீனம்,நாகரீகம்.பண்பாடு, பழக்கவழக்கம்,உணவுமுறை,மேலும் பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.ஆனால் நாம் எவ்வளவு தான் தெளிவு படுத்தினாலும் யாரும் மாரமாட்டார்கள்.ஏனெனில் சமூகம் அப்படி .தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை உண்பவனை கேலியாகவும்,peeza ,பர்கர் போன்றவைகளை உண்பவனை பெருமையாகவும் பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

எவ்வளவு கட்டுரைகள் போட்டாலும் படிக்க கூட நேரம் இல்லாத உலகம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் இவ்வாறு நல்லதை சொல்பவனை அலட்சியமாகவும் பார்க்கின்றனர்.அதை பத்தி கவலை இல்லாமல் உங்கள் கண்களை பாதுகாக்க உங்களுக்கு தெரிந்த விஷயங்களைதன் நினைவு படுத்துகிறேன்.வாருங்கள் பார்க்கலாம்.
1.உங்களால் முடிந்த அளவு இரவு உணவை சீக்கிரமாக 9 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 10 மணிக்குள்ளாகவே தூங்க முயற்சியுங்கள்.
2.கண்டிப்பாக 11 மணிக்கு உள்ளாகவே  நீங்கள் தூங்கி இருக்க வேண்டும்.
3.ஒளித்திரைகளை அதிகம் பார்ப்பவர்கள் அதற்கென சந்தைகளில் கிடைக்கும் பிரத்யேகமான கண்ணாடி கலை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

4.இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்வோர்கள் தலை கவசம் அல்லது கண்ணாடிகளை அணிந்து செல்வது இந்த கொடைகாலத்தில் அனல் காற்று கண்ணில் படுத்தையும்,பிற மாசுக்கள் கண்ணில் படுவதையம் தவிர்க்கலாம்.
5.உங்கள் உள்ளங்கைகளை அடிக்கடி குவித்து கண்களில் வைத்து எடுப்பதன் மூலன் கண்களை குளூர்ச்சு பெற செய்யலாம்.
6.அடிக்கடி உள்ளங்கைகளில் தண்ணீர் எடுத்து அதை கண்ணில் வைத்து சில முறை கண்ணை சிமிட்டுவதான் மூலம் கண்ணில் உள்ள அழுக்குகளை வெளியேறலாம்.
7.தினமும் காலையில் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதனுள் நம் தலையை முக்கி கண்களை சிறுது நேரம் மூடி மூடி திறப்பதனால் கண்ணில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுடன்,தண்ணீரில் உள்ள பிராணன் நமது கண்களில் வழியாக பரவி பல நன்மைகளை கொடுக்கிறது 
8.கண்களுக்கு நன்மை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இவைகளை தினமும் உட்கொள்ளவது சிறந்த பலனை கொடுக்கும்.
9.கருவளையம் தோன்றினால் அதை பற்றி கவலை கொள்ளாமல் அதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வது சிறந்தது.
10 உடலை ஆரோக்கியமாக, குளிர்ச்சியாக பார்த்து கொண்டாலே கண்கள் வெள்ளை வெளீரென அவ்வளவு அழகாக இருக்கும்.
இதற்கு மேலும் கண்களை கூர்மையாக பார்க்க மற்றும் கண்களின் அற்புத சக்திகளை பேரவேண்டுமானல் நோக்கு வர்மம்,காந்த பார்வை,போன்ற பயிற்சி வகுப்புகள் மூலம் உங்களின் கந்த சக்தியை அதிகப்படுத்தி உங்களின் பார்வையை கழுகு பார்வை என்று சொல்வார்களே அவ்வளவு கூர்மையக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக