புதன், 9 மே, 2018

அந்த இடம் கருப்பா அசிங்கமா இருக்கா? பளப்பளப்பா "வெண்மையா" மாற இதோ ஈஸியான டிப்ஸ்!

அந்த இடம் கருப்பா அசிங்கமா இருக்கா? பளப்பளப்பா "வெண்மையா" மாற இதோ ஈஸியான டிப்ஸ்!

நாம் என்னதான் சுத்தமாக இருந்தாலும், கை அக்கிள் வியர்வை நம்மை எரிச்சல் படுத்தும் அல்லவா..?
அதுவும்  சம்மர் சமயத்தில் மிகவும் கஷ்டம்..அந்த அளவிற்கு நமக்கு வியர்வை ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் கருமை நிறமாக மாறி விடும்....
அக்கிள் அதிக வியர்வை காரணமாக அதுவும் குறிப்பாக சம்மர் சமயத்தில், ஷேவிங்  செய்துகொள்வது,மற்றும் செயற்கை நறுமண பொருட்களான பெர்ப்யூம் உள்ளிட்ட மற்றவற்றை  பயன்படுத்துவது என  மற்ற  காரணங்களால் கருமையாக  மாறி விடுவது வழக்கம்.
இதனை இரண்டே நாட்களில் எப்படி போக்குவது என்பதை பார்க்கலாம்.
எலுமிச்சை என்பது ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருளையும் கொண்டது. அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அக்குளை வெள்ளையாக்குவதற்கு, எலுமிச்சையை வெட்டி, அதன் துண்டை அக்குளில் சில நிமிடங்கள் தேயுங்கள். பின் 10 நிமிடம் கழித்து, நீரால் கழுவுங்கள்.
இப்படியும்  செய்யலாம்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இந்த செயலாலும் அக்குள் கருமை அகலும்.
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் சுடு தண்ணீரில் கழுவலாம்
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்
சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கருப்பாக காட்டும் அக்குளில் உள்ள இறந்த செல்களைப் போக்க சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை நல்ல பலனைத் தரும்.
தேன் அக்குள் கருமையை விரைவில் போக்கும். அதற்கு தேனி அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், தேனை, பால், கற்றாழை ஜெல் போன்ற ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.
தக்காளி
தக்காளியை வெட்டி அதை அக்குளில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
பால்
பால் பாலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், இதனை அக்குளில் தினமும் மொன்று முறை  தடாவி ஸ்கரப் செய்து வந்தால் விரைவில் கருமை நீங்கி வெள்ளை நிறமாக மாறிவிடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக