வெள்ளி, 11 மே, 2018

ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் சக்தி இதுக்கு உண்டு...

ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் சக்தி இதுக்கு உண்டு...

உலர்ந்த பழங்களில் ஏராளமான ஊட்டசத்துகள் உள்ளது என்பது நாம் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இந்த ஒரு உலர்ந்த பழம் போதும் நம் உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளுக்கு இது தீர்வாக உள்ளது.உலர்ந்த அத்தி பழத்தினை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.இதை அப்படியே கூட சாப்பிடலாம் அல்லது தேன் நீர் போன்றவற்றில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இப்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் 10 நன்மைகள் உண்டாகும். உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்கு இதனை அன்றாடம் உட்கொள்வது மிகச்சிறந்தது.
உலர்ந்த அத்தி பழம் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுவதால் இது ப்ரீ-ராடிக்கல்களை நீக்கி இதய நோயினையும் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.இதில் பாஸ்பரஸ் வைட்டமின்-டி கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளால் காலையில் தினமும் சாப்பிட்டு வர எலும்புகள் வலுப்பெற்று உறுதியானதாக மாறும்.
குறிக்காக பெண்கள் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க தினமும் ஊற வைத்த அத்திபழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். அபாயகரமான புற்றுநோயை தவிர்க்கலாம். அந்திப்பழத்தில் நார்சத்துகளும் நிறைந்துள்ளது. எனவே உடல் பருமன் அதிகமாக இருப்பவர் இரவில் ஊறவைத்த அத்திபழத்தினை காலையில் சாப்பிட்டு வர உடல் எடை குறைத்து ஆரோக்கியமானவராக மாற்றிவிடும்.
இதில் உள்ள கனிமச்சத்துக்களான ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை இருப்பதால் பாலியல் பிரச்சனை உள்ள ஆண்களும் பெண்களும் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.சோடியம் அளவு குறைவாகவே இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களும் தினமும் சாப்பிட வேண்டிய ஒரு முக்கிய பழம்.
உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் தொண்டைப் புண் சரியாவதோடு, இதர சுவாச பிரச்சனைகளான நாள்பட்ட இருமல், ஆஸ்துமா போன்றவைகளும் குணமாகும்.உலர்ந்த அத்திப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான வைட்டமின் ஏ சத்து ஏராளமான நிரம்பியுள்ளது. முதுமையிலும் கூட தெளிவாக பார்க்க முடியும்.
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்ள இன்சுலின் வெளியீட்டின் அளவு நடுநிலைப்படுத்தபடுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவி, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக