புதன், 9 மே, 2018

கண்ணீர் விட்றதுல கூட இவளோ நல்ல விஷயங்கள் இருக்கா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

கண்ணீர் விட்றதுல கூட இவளோ நல்ல விஷயங்கள் இருக்கா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

சரியான அழுமூஞ்சி எப்ப பாரு அழுகுற இப்படித்தான் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உங்கள சொல்றாங்களா கவலையே படாதீங்க நீங்க தாங்க சூப்பர் ஹீரோ.
படமோ அல்லது ஏதோ ஒரு செய்தி கேட்ட்தும் மனம் தாங்காமல் கண்ணீர் விடும் நபர்கள்தான் மன உறுதி படைத்தவர்கள். ஆமாங்க பிறரது கஸ்டத்தை காண பொறுக்காத மனிதர்கள்தான் மிகவும் போராட்ட குணமும், தன்னுடன் இருப்பவர்களின் துன்பத்திற்கு தீர்வை தேடித்தரும் ஆட்களும் இவர்கள்தான்.
இவர்கள் எப்போதும் கற்பனையோ உண்மையாகவோ நடக்கும் சம்பவங்களை தன் வாழ்வோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். போராட்ட மனநிலை உடைய இவர்கள் தனக்கு தேவையான நியாயங்களை பெற சலிக்காமல் போராடக்கூடியவர்கள்.
வார்தைகளால் சொல்ல முடியாத பல சூழல்களையும் கடக்க கண்ணீர்தான் கை கொடுக்கும். அழகைதான் துயரங்களின் வடிகாலாகவும் மன உளைச்சலின் வெளிப்படுத்தும் செய்கையாகவும் இருக்கிறது. கண்ணீர் வெறும் கண்ணீர் அல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
அழுகக் கூடாது எனச் சொல்லப்பட்டதற்காக அழுகாமல் தன் துன்பத்தை அடங்கிக்கொண்டு இருப்பவர்கள் உளவியல் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். தனக்கு வந்த துன்பத்திற்கு பிறகு கண்ணீர் விட்டு அழுதபின் நன்றாக உணர்வதாக ஆய்வில் சொல்லியுள்ளார்கள்.
கண்ணீர் உப்பு கலக்காமல் வாழ்க்கையில் சுவையில்லை என்பதை அறிந்து கொள்வோம். அழுகை ஒரு போதும் கோழைத்தனத்தின் வெளிபாடு அல்ல என்பதை உணர்வோம். அழுகையை குற்றவுணர்க்கு உள்ளாக்காதீர்கள். சிரிப்பு போலவே மனிதனுக்கு தேவையான உணர்ச்சிதான். அழுங்க மெண்டல் ஸ்ட்ரெஸ் இல்லாம  இருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக