குளியலுக்கும் ஓர் அழகாண இலக்கணம் உண்டு.
செந்தமிழுக்கு இலக்கணம் இருப்பதை போல குளியலுக்கும் ஓர் அழகான இலக்கணம் உண்டு.நம் முன்னோர்கள் குளியல் முறைகளினாலே பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று நிரூபித்து உள்ளார்கள்.நம் முன்னோர்கள் ஆற்று நீரில்,நீர் வீழ்ச்சிகளிலும்,குளிர்ந்த நீர் தடகங்களிலும் காலை, மாலையில் குளித்து உடலை குளிர்ச்சியாகவும்,புதுநற்சியாகவும், ஆரோக்கியமாகவும் பேணி பாதுகாத்து வந்தனர்.ஆனால் நாம் இப்போது முறையான குளியலை பின்பற்றுகிறோமா என்றால் சுத்தமாக இல்லை என்றே கூறலாம்.
பரந்த நீர் நிலைகளில் உல்லாசமாக குளித்து வந்த நாம் இப்போது ஒரு சிறிய குளியல் அறையில் முடங்கி கிடக்கிறோம்.பாத்டப்பில் அவசரமாக மூழ்கி எழுவதும்,ஷவரில் மேலோட்டமாக நனைவதும்,குளிக்க கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக குளித்து விட்டு வேலைக்கு ஓடுவதும் முறையான குளியலா?
உணவை சரியாக மென்று சாப்பிடக்கூட நேரமில்லாமல் தொடங்கி,குளிக்கவும் சரியான நேரமில்லாமல் இருக்கும் அவசர யுகத்தில் வாழ்ந்து வருக்கின்றோம். குளியலுக்கும் ஒரு கிறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்து ரசித்து கொண்டே குளித்து பாருங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை நம்மில் அடைக்கலம் புகும்.
மேலும் இந்த அனல் பறக்கும் வெயில் காலத்தில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
உடல் சூட்டை குறைக்ககாலை குளியல் உடலில் உள்ள அழுக்குகளை நீக்குவது மட்டும் இல்லாமல் இரவு உறக்கத்திக்கு பின் ஏற்படும் உடல் வெப்பதியும் போக்கி ,உடல் சுறு சுருப்பாக இருக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் காலை குளியல் அந்நாள் முழுதும் உடல் வெப்ப சீர்மையை பரமரிப்பதுடன்,உடல் வெப்பத்தை குறைத்து,ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.கோடை காலத்தில் ஏற்படும் பகல் நேர வெப்பதினால் உண்டாகும் உடல் சூட்டையும்,வியர்வையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் குளிப்பது நல்லது.மாலை நேரக்குலியல் மனதிற்கு உற்சாகத்தையும்,இரவு நல்ல உறக்கத்தையும் தருவதாக அமெரிக்காவை சேர்ந்த வாழ்வர் ஹம்ப்டன் என்னும் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
நூல்கள் அறிவுறுத்தும் குளியல்
கோடை காலத்தில் செரிமானத்தை முறைப்படுத்த மிக மிக எளிய வழி காலை குளியலாம்.காலை குளிக்கில் கடும்பசி நோயும் போம் இந்த பாடல் காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்தால் உடல் குளிர்ச்சி பெற்று,செரிமான கோளாறுகளும் சரியாகும் என்பதை உணர்த்துகிறது.
நீருக்கு மனதை சந்தப்படுத்தும் தனமை இருப்பதால் கெட்ட கனவுகளின் தாக்கம் குறையும் என்பது அக்கால நம்பிக்கை.
வெயிலை சமாளிக்கவும்,வெப்ப நோய்களில் இருந்து தப்பிக்கவும் எண்ணெய் குளியல் மிகவும் உதவுகிறது.நல்லெண்ணையில் சீரகம் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆரிய பின்பு தலையில் மற்றும் உடல் முழுவதும் தடவி குளித்தால் வெப்ப நோய்களை கண்டு அஞ்ச தேவையில்லை. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் அரக்கு தைலம்,சன்னதி தைலம் போன்ற சித்த மருந்து தைலங்களியும் பயன்படுத்தலாம்.பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாய் பிறகும் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் வெப்பம் சீராகி முறையான மாத விடாய் சுலட்சி உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக