தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
வைட்டமின் ஏ, வைட்டமின் சி வைட்டமின் கே, வைட்டமின் பி6, ப்போலேட், தையமின், பொட்டாசியம்,மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், புரதங்கள், நார்ச்சத்துக்கள், லைக்கோஃப்பின் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்றி.
சாதாரண அளவில் உள்ள ஒரு தக்காளி பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சி யில் 40 % கிடைக்கிறது. தக்காளி பழத்தில் உள்ள வைட்டமின் கே இரத்தம் கசியும் போது இரத்த கசிவை கட்டுப்படுத்துகிறது.
தக்காளி பழத்தில் உள்ள லைக்கோஃப்பின் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
தக்காளி பழத்தில் உள்ள லைக்கோஃப்பின் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இதய ஆரோக்கியம்: லைக்கோஃப்பின் உடலுறுப்புகளில் ஆக்ஸிஜனேற்றத்தை தடுக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்றத்தை தடுப்பதால் இதய கோளாறுகளை தடுக்கிறது. தொடர்ந்து தக்காளி சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
புகைப்பதினால் ஏற்படும் விளைவுகள்: தக்காளி பழத்தில் உள்ள அமிலங்கள் புகைப்பதினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோய் தடுக்க உதவுகிறது.
கண் பார்வை: வைட்டமின் ஏ கண் பார்வை மேம்பட உதவுகிறது. வைட்டமின் ஏ அற்புதமான எதிர்- ஆக்ஸிஜனேற்றம் தன்மை கொண்டது.
செரிமான கோளாறு: தக்காளி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோய்: டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம். தினமும் தக்காளி தொடர்ந்து சாப்பிடுவதால் நீரிழிவு நோய் குறைகிறது.
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள பின்தொடரவும், லைக், சேர் மற்றும் கமெண்ட் செய்யுங்கள். Thanks NEWS HOT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக