கணவன் மனைவி சண்டையின் போது செய்ய கூடாத சில விஷயங்கள்!
கணவன் மனைவி உறவு என்பது எப்போதும் ஆரோக்கியமான உறவாக இருக்க வேண்டும். இந்த உறவுக்குள் சண்டைகள் இல்லாமல் இருக்கவே முடியாது என்பது உண்மை.. ஆரோக்கியமான மற்றும் ஆழமான உறவுகளுக்குள் சண்டைகள் வருவது என்பது இயல்பான ஒன்று தான்..!
சண்டைகள் எப்போதுமே உறவை மேம்படுத்துவதாகவும், விவாதங்கள் எப்போதுமே ஆரோக்கியமான நல்ல விவாதங்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.. சண்டைகளை அடுத்த நாளுக்கு எடுத்து செல்வது என்பது கூடவே கூடாது..! சண்டையிடும் போது கோபம் வருவது இயல்பான ஒன்று தான்..
ஆனால் அதற்காக நீங்கள் உங்களது துணைக்கு பிடிக்காத விஷயங்களை வேண்டுமென்றே பேசி சண்டையை பெரிதாக்குவது என்பது கூடாது.. இந்த பகுதியில் கணவன் மனைவி சண்டையில் எதை எல்லாம் செய்ய வேண்டும் மற்றும் எதை எல்லாம் செய்ய கூடாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்...!
கணவன் மற்றும் மனைவி இருவருமே ஒரே சமயத்தில் கோபமாக இருக்க வேண்டாம்.. இது சற்று கடினமானது தான் என்றாலும், ஒருவர் கோபமாக இருக்கும் போது என்ன நடந்தாலும் மற்றோருவர் கோபப்படாமல் இறுதி வரையில் மற்றொருவரை சமாதனம் செய்ய பாருங்கள்.. இருவரும் ஒரே சமயத்தில் கோபமாக இருந்தால் சண்டை முடிவுக்கு வருவது மிகவும் கடினமானதாகும்.
கணவன் மனைவி சண்டையின் போது எப்போதுமே கடந்த காலத்தினை பற்றி பேசி உங்களது துணையை காயப்படுத்தாதீர்கள்.. மறக்க நினைக்கும் கடந்த காலத்தினை நினைவுப்படுத்தி அவரது மனதை கஷ்டப்படுத்தாதீர்கள்..
மனிதனாக பிறந்தால் நிச்சயம் சில குறைகள் இருக்க தான் செய்யும். அதற்காக இருவரும் மாறி மாறி சண்டையின் போது ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக் கொண்டே இருக்காதீர்கள்.. இது சண்டையை பெரிதுபடுத்துவதுடன், பேசிய வார்த்தைகள் காயத்தை உண்டாக்கும். Thanks uravugal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக