புதன், 9 மே, 2018

வல்லாரை கீரையை உண்பதால் குணமாகும் நோய்கள் பற்றிய பார்வை..

வல்லாரை கீரையை உண்பதால் குணமாகும் நோய்கள் பற்றிய பார்வை..

வல்லாரை கீரை நம் ஊர்களில் உள்ள கால்வாய் மேடுகளிலும், குளக்கரைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், வயல்வெளிகளில் உள்ள வரப்புகளிலும் தானாக வளரக் கூடியவை. நீர் அதிகமுள்ள இடங்களில் இந்தக் கீரை கொடியாகப் பரவிக் கிடக்கும்.இந்த வல்லாரை கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்தக் கீரை பொதுவாக உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகவே அதிகம் பயன்படுகிறது.
வல்லாரை கீரையின் பயன்கள்:
  • வெங்காயம், மிளகு, சீரகம் போன்றவற்றை வல்லாரை கீரையுடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம்.வல்லாரை கீரையை சமைக்கும் போது கண்டிப்பாக புளி சேர்க்கக் கூடாது.சேர்த்தால் அதன் மருத்துவ குணமும்,சுவையும் மாறிவிடும்.உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் வல்லாரை கீரையை சாம்பாராக சமைத்து உண்பதன் மூலம் சரியாகும்.
  • வதக்கிய வல்லாரையுடன் வறுத்த உளுந்து, தேங்காய்,மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் போல அரைத்து சாப்பிடலாம். வல்லாரையை பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். வல்லாரை கீரையை துவையலாக சமைத்து உண்பதன் மூலம் உங்களுடைய மலச்சிக்கல் சம்பந்தமான நோய்கள் தீரும்.
  • குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை வல்லாரை கீரையின் இலையை வாயில் போட்டு மென்று விழுங்குவதன் மூலம் அகலும்.
  • வல்லாரை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்கள் குணமாகும்.
  • வல்லாரை கீரையை கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • வல்லாரைக் கீரை மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தி ஞாபக சக்தியை வளர்க்கிறது. 
  • வல்லாரை கீரையை சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சியை கட்டுக்குள் வரும் மற்றும் உங்களின் ரத்தத்தை சுத்தம் செய்யும்.
  • இருதய பலம் மற்றும் தாது விருத்திக்கு வல்லாரை கீரை உதவுகிறது.உங்கள் உடலில் ஏற்படும் குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் போன்றவை வல்லாரை கீரையால் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக