செவ்வாய், 1 மே, 2018

5 பொருட்களை பகிர்ந்து கொள்ளவே கூடாது

5 பொருட்களை பகிர்ந்து கொள்ளவே கூடாது 

சில பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது நோய்களை பகிர்ந்து கொள்வதற்கு சமம். எப்போதும் சில பொருட்களை பகிர்ந்து கொள்ள கூடாது. அவற்றில் எட்போன், ஆடை, டூத்ப்ரஷ், பட்ஸ் மற்றும் ஜட்டி குறிப்பிட தக்கது.
1. டூத்ப்ரஷ்:
மற்றவர்கள் டூத்ப்ரஷ் யை நீங்கள் எப்போதும் உபயோகிக்காதீர்கள் மற்றும் உங்கள் டூத்ப்ரஷ் யை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். டூத்ப்ரஷ் பல கிருமிகள் கொண்டது, ஒரு முறை உபயோகித்தால் டூத்ப்ரஷ் ல் உள்ள கிருமிகளை அழிக்க நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கலாம். ஆனால் கொதிக்கும் நீரில் போடும்போது சில வேதி பொருட்கள் டூத்ப்ரஷ் ல் இருந்து வெளியாகும். ஆகவே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
2. லிப் ஸ்டிக்:
லிப் ஸ்டிக் பயன்படுத்துவதால் ஹெர்பீஸ் என்ற நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே பெண்கள் லிப் ஸ்டிக் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. நக வெட்டி:
நக வெட்டியை நோய் உள்ளவர் பயன்படுத்தும் போது காயம் ஏற்பட்டு மற்ற ஒருவர் இந்த நக வெட்டியை பயன்படுத்தும் போது காயம் ஏற்பட்டால் பல நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் நோய் கூட பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே மற்றவர்களுடன் நக வெட்டியை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
4. காதில் பயன்படுத்தும் பொருட்கள்:
பட்ஸ், எட்போன போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்ளவே கூடாது. இவை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பாக்டீரியாக்களை பரவ செய்கிறது.
5. செருப்பு:
கோடைகாலத்தில் செருப்பு அணியும் போது கால்களில் இருந்து சுரக்கும் வியர்வைியில் பாக்டீரியாக்கள் இருக்கும். செருப்பு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் இந்த பாக்டீரியாக்கள் அவர்களை தாக்கும். எனவே செருப்பு பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. thanks NEWS HOT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக