நம்ம ஊரில் உள்ள வில்வ மரத்தின் இலையால் இவ்வளவு நன்மைகளை தரமுடியுமா, படிக்கும் போதே ஆச்சரிப்பட்டு விடுவீர்கள்
வணக்கம் நண்பர்களே, நம்ம ஊரில் காணப்படும் வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். இதனால் நிறைய நல்ல பலன்களை நம்மால் பெறமுடியும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை, கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக