வெள்ளி, 27 ஜூலை, 2018

வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா

வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா

மாறி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ;ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.
இதன் விளைவாக ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலைமுடி உதிர்தல், வயிற்றுவலி, உடல்எடை குறைதல் போன்றன நிகழ்கின்றன. இவற்றிற்கு நாம் வீட்டிலிருந்தே தீர்வு காண முடியும்.

தேவையான பொருள்கள்
01. நல்லெண்ணெய்
02. பூண்டு
03. மிளகு

செய்முறை
நல்லெண்ணையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறியதும் எண்ணையை, காலின் (இருகால்) பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம், உஷ;ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன் பெறுங்கள்.

1 கருத்து:

  1. We are looking for serious kdney donors for sum of 3 crore,For more info Email: healthc976@ gmailcom
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு