இந்தியாவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் ஏராளமான பிணிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த வில்வம் இலை. இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மாத்திரம் இல்லாமல் ஏராளமான தனிச் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது.
வில்வ பழங்கள்:
இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும்.
இதன் மருத்துவ குணத்தால் சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. இதன் இலை, தண்டு மற்றும் பழம் என்று ஒட்டுமொத்த தாவரமும் நமக்கு பலனளிக்கிறது
வில்வ இலையில் உள்ள ஆன்டி பயாடிக் பொருட்கள் சில நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோய்:
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் டயாபெட்டீஸ் நோய் வருகிறது. இந்த டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தயாரிக்கும் முறை:
முதலில் 7 வில்வ இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி அந்த தேநீரை தினமும் 3 முறை பருக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக