வியாழன், 19 ஜூலை, 2018

சோற்று கற்றாழை ஜூஸ் குடிச்ச இவ்ளோ நன்மைகளா!

சோற்று கற்றாழை ஜூஸ் குடிச்ச இவ்ளோ நன்மைகளா!

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸை குடித்து வாருங்கள் கற்றாழை ஜெல்லில் உள்ள சேர்மங்கள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றுகிறது.
மேலும் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும், அதேபோன்று சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் காணப்படும். உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள் வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கரும்புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும் முகம் பளபளப்பாக மாறும்.
முக்கியமாக கோடை காலத்தில் உருவாகக்கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், உடல் சூடு, மாதவிடாய்க் கோளாறுகள், போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக்கற்றாழை அருமருந்தாகவும் அமைகிறது. அதுமட்டுமல்ல சோற்று கற்றாழை ரத்தத்தின் தரத்தை அதிகரிக்கிறது உடலை சமப்படுத்துகிறது மற்றும் மோசமான கொழுப்பு அளவுகளை குறைக்கிறது.
மேலும் உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்கிறது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது மேலும் இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் உடல் செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள வீக்கம் மற்றும் அலர்ஜியை வெளியேற்றவும் மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் கற்றாழை சாறு தலை முதல் கால் வரை உள்ள அலர்ஜியை குணமாக உதவுகிறது. அதேபோன்று நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது ஏனென்றால் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
மேலும் கற்றாழை ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் கற்றாழை ஜூஸ் குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அதேபோன்று உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின் தினமும் ஒரு டம்ளர் சோற்று கற்றாழை ஜூஸ் குடித்தால் போதும் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சனை, வயிற்று வலி, மற்றும் நெஞ்செரிச்சல், ஏற்படுவது நீங்கும்.
இப்பொழுது சோற்று கற்றாழை ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். சோற்று கற்றாழை மற்றும் வெல்லம் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். கற்றாழையை நன்றாக பல முறை கழுவி அந்த ஜெல்லை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும், பின்பு அதில் வெல்லத்தூளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது இதில் சிறிது தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும் இப்படி காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் இரண்டு வாரத்திலேயே நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக