ஒமேகா என்பது என்ன?!
உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் அடிக்கடி குறிப்பிடுகிற வார்த்தைகளில் ஒன்று ஒமேகா. மருத்துவ இதழ்களின் கட்டுரைகளிலும் இந்த ஒமேகா அதிகம் இடம் பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். இந்த ஒமேகாவுக்கு நம் ஆரோக்கியத்தில் அப்படி என்ன முக்கியத்துவம்?!
* ஒமேகா(Omega) என்பது நன்மை செய்யும் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்தது. இந்த வகை கொழுப்பு அமிலத்தை நமது உடலில் உருவாக்க முடியாது. எனவே, இதனை உணவின் மூலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
* மூளையின் செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்க ஒமேகா உதவும்.
மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
* ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் ஒமேகா அவசியம். புற்றுநோய், மன அழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்த பின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.
* ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் நம் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. உடல்நலத்தை பாதுக்காக்க ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு
அமிலங்களை கொண்ட எண்ணெய் மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
* ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உணவில் ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் உணவில் 1:1 அல்லது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
* எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.
* அறிவு வளர்ச்சிக்கு ஒமேகா 3 மிகவும் நல்லது. மீன் எண்ணெயில் இருப்பது ஒமேகா 3-தான். மீனில் காணப்படும் இந்த ஒமேகா 3 எண்ணற்ற நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
* வளரும் குழந்தைகளின் உணவில் மீன் அடிக்கடி சேர்க்கும்போது அவர்களுடைய அறிவு விருத்தியடையும். கர்ப்ப காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3-க்கு முக்கிய இடம் உண்டு.
* தாய்மைக் காலத்தில் இருக்கிற பெண்கள் மீனை தொடர்ந்து சாப்பிட்டால் ஒமேகா 3 குழந்தைகளுக்கு போய்ச் சேரும். அது அவர்களுடைய குழந்தைகளின் அறிவைக் கூர்மையாக்கும்.
* மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.எச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக் கொள்ளும்.
* நல்ல எண்ணெய் பசையுள்ள மீன்களில்தான் ஒமேகா 3 நமக்கு தாராளமாகக் கிடைக்கும். குறிப்பாக, சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற குளிர் நீர் எண்ணெய் மீன்களே EPA மற்றும் DHA ஆகியவற்றின் மிகவும் பரவலாகக் கிடைக்கும் மூலங்களாகும்.
* ஒமேகா -3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா- 3 உள்ளது. இந்த வகை மீன்களை
(வறுக்காமல்) உண்டால் மாரடைப்பு வரும்
சாத்தியக்கூறு 44% குறைகிறது.
* பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் ஒமேகா 3 உள்ளது.
* சணல் விதை எண்ணெய், வாதாம் கொட்டைகள், பசலைக் கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா 3 செறிந்துள்ளது. தினமும் 2 மேஜைக் கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் அல்லது பருப்பு களுடன் கலந்து சாப்பிடுவது நல்லது.
* ஒமேகா நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
நன்றி குங்குமம் டாக்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக