கொத்தமல்லியின் _ நன்மைகள்...
அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் மூலிகை தான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லி உணவில் நல்ல மணத்தை கொடுப்பதற்கு மட்டுமின்றி, இதில் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.
முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த கொத்தமல்லி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் கொத்தமல்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்சிசியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.உங்கள் உதடு கருப்பாக, பொலிவிழந்து உள்ளதா? அப்படியென்றால், இந்த வழி உங்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.உங்களுக்கு முகப்பரு தொல்லை இருந்தால், ஒரு கப் நீரில் கொத்தமல்லி, சிறிது சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து, வடிகட்டி அந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ, முகப்பரு பிரச்சனையை விரைவில் போக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக