செவ்வாய், 10 ஜூலை, 2018

இளமையான எண்ணத்திற்கும், தோற்றத்துக்கு ஒருகப் காபி? எப்படி?

காபி கெடுதல்-னு நினைத்தீர்கள் என்றால் இதை படித்துப்பாருங்கள், உங்களின் எண்ணத்தை கட்டாயம் மாற்றிக்கொள்வீர்கள். 
சூடா ஒரு கப் காபி! சொல்லும் போதே கடைசியாக எங்கோ குடித்த நல்லக் காபியின் சுவை நாவில் வந்து நிற்கிறது.
ஒவ்வொருவருக்கும் காபியை ஒவ்வொரு மாதிரி பிடிக்கும். சிலருக்கு சூட பால் கலந்து, திட்டமான சக்கரை இருக்க காபி இருந்தாதான் விடிஞ்ச பகல் பகலாவே தெரியும். சிலருக்கு சிறு கசப்போட சுறுக்குனு இருந்தாதான் அது காபி. பால் இல்லாம கடுங்காபி குடிச்ச வரும் புத்துணர்ச்சியை போதை பொருள் போல பார்த்து அடிமையாகுரவங்களும் இதுல இருக்காங்க.

காபி என்றென்றும் மாறாத ஒருவிதமான புத்துணச்சியை அளிக்கும் என்பது  காபி பிரியர்களுக்குத் தான் தெரியும். முக்கால் வாசிப் பேர் காபி பைத்தியமா இருக்கும் போது, காபி குடிக்கத் தோன்றியும் உடலுக்கு நல்லதில்லை என்று ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

காபியில் அப்படி என்ன கெடுதல் இருக்கு? ஒரு குட்டி அலசல்!
-சுமார் ஒரு கப் காபியில்(250 மிலி) வைட்டமின் B2, B5, B1, B3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை கலந்திருக்கு.

-இதில் உள்ள சில வேதிப்பொருட்களுக்கு 'பார்கின்சன்' நோய் (parkinson’s disease),கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை இருக்கு.

-இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.

-தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம். 

-முக்கியமாக, காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, உடலில் இளமை தோற்றத்திற்கு பொறுப்பான கொலாஜன்(Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த கொலாஜன் ஒரு மிருதுவான சதை. இது தோல்களின் கீழ் இருக்கும். இதன் வேலையே தோலை தசைகளுடன் இறுக்கி பிடிப்பது தான். இது வயது முதிர்வினால் செயலிழக்கும். இதன் உற்பத்தி குன்றும். இதனால்தான் தோல் தளர்ந்து சுருக்கங்களுடன் காணப்படும். 

இதெல்லாம் நல்லது தானேனு பாக்குறீங்களா? 

சரி இப்போ காபியின் கெடுதல்கள் என்னனு பார்ப்போம்.
-கபியில் 'காஃபின்' என்ற வேதிப்பொருள் இருக்கு. இந்த வேதிப்பொருள் தான் பல காலமா நல்லதா கெட்டதா-ங்கிற கேள்விக்குள்ளாகி கொண்டிருக்கு.

நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் (NeuroTransmitter) 'காஃபின்' தூண்டிவிடும், இது மூளையின் செயல்பாட்டை வேகப்படுத்தும். சோர்ந்துப் போன மூளைக்கு புத்துணர்வு தரும். இதயத்தின் செயல்பாட்டை சூடுபிடிக்கச் செய்யும். இது எல்லாருக்கும் ஒற்றுப்போகாது. இதய நோயாளிகளுக்கு இந்த வேதிப்பொருள் ஒரு பிரச்னை தான்.

-தூக்கம் வராமல் இருக்க காபி குடிப்பது எல்லோருக்கும் தெரிந்த டிரிக் ஆகும். இதில் என்னப்பிரச்னை என்றால், இரவு நேரத்தில் காபி உட்கொள்வது சில மணி நேரத்திற்கு தூங்குவதை கடினமாகிவிடும்.

இப்படி மனதிற்கும் முகத்திற்கும் சில நொடிகளில் இளமைப் பொலிவை தரும் காபியை தொடவே கூடாது என்று யாரும், யாருக்கும் பரிந்துரைத்ததில்லை. ஒருநாளுக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி கெடுதல் விளைவிக்காது என உணவு ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

பலர் வீட்டில் 60-70 தொட்ட பாட்டி தாத்தா இன்னும் காபி அப்பப்போ குடித்துக் கொண்டேதான் இருக்காங்க. இதனால் அவங்களுக்கு என்ன கெடுதல் வந்தது என்று யாராவது கூற முடியுமா? 

சரி...  காபி குடிக்க மாட்டேன்னு கடுபுடியா இருக்கவங்க காபிய வேற விதமாகவும் உபயோகிக்கலாம். பொலிவான முகத்திற்கு காபி பேஸ் பேக்! இதையும் நல்லதா கெட்டதானு யோசிக்க தேவையில்ல! கீழ இருக்க லிங்க் போய் சில பயன் தரக்கூடிய காபி டிப்ஸை பாருங்க. பாரபட்சம் இல்லாம பயன்பெறுங்க!
இளமையான முகத்திற்கு காபியை எப்படி பயன்படுத்துவது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக