பாரம்பரியத்தை மீட்டுவந்தால் ஆரோக்கியம் மீண்டுவரும் ....
நம் வாழ்க்கை முறையை நவீன காலத்திற்கு ஏற்றது போல மாற்றியதால் நாம் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் சமையல் பாத்திர பிரச்சனையும் ஒன்று . சமையல் பாத்திரம் தானே என்று அசால்ட்டாக நினைக்காதீர்கள் , அது நம் உடல் நிலைமையை மோசமாக்கி கொண்டு இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டுள்ளது.
1 . இரும்பு பாத்திரம்
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது அதில் உள்ள இரும்பு சத்தும் நம் உடலில் சேர்கிறது .இருப்பில் செய்த தோசைக் கல்லில் தோசை சுட்டு சாப்பிடும் போது இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது , அதுமட்டுமல்லாமல் இரும்பு அதிக நேரம் சூட்டை தாங்கும் என்பதால் எரிபொருளும் சேமிக்கப் படுகிறது.
2 . வெண்கல பாத்திரம்
அந்த காலத்தில் வெண்கல பாத்திரத்தி தான் குடி நீர் வைத்திருப்பார்கள் .அண்ணல் இப்பொழுது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடிக்கிறார்கள். வெண்கல பாத்திரத்தை கழுவுவதற்கு சிரமப்பட்டுவிட்டு நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறோம் .வெண்கல பாத்திரத்தில் உண்பதால் நம் இதய துடிப்பு சீராகும், தைராய்டு சுரப்பியை சமநிலைப்படுத்தும் , ரத்த செல்களின் அளவை அதிகரிக்கும், கேட்ட கொழுப்பின் அளவை குறைக்கும் என பல நன்மைகள் உண்டு.
3 . தாமிர பாத்திரங்கள்
ஆலயங்களில் தீர்த்தம் செம்பு பாத்திரங்களில் தரப்படுகிறது .ஏனெனில் இது அதிக மருத்துவ குணம் உடையது. இதில் வைக்கப்படும் பொருளில் உள்ள பாக்டீரியாக்கை அழிகிறது மற்றும் தேவையற்ற சத்துக்களை தன்னுள் வாங்கிக்கொண்டு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.ஆனால் செம்பு பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் வைத்து குடிக்க கூடாது.
4 . மண்பாண்டம்
மண் பானைக்கு நிகரான சுத்தமான குடி நீர் கிடையாது. இதழில் ஊற்றி குடிக்கும் தண்ணீர் வெய்யிலின் சூட்டை தணிக்கிறது. தில் சமைக்கப்படும் உணவு தனி சுவையுடன் இருக்கிறது. இது தண்ணீரில் இருக்கும் கேட்டதை மட்டும் நீக்கி தாதுக்கள் குறையாமல் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நமக்கு தருகிறது.
இவ்வாறு நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பாரம்பரியத்தை மீட்டு நம் ஆரோக்கியத்தையும் நம் குழைந்தைகள் எதிர்காலத்தையும் காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக