அப்துல் கலாம் ஐயாவின் நினைவு திருக்குறள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குறள்: 231
*ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது*
*ஊதியம் இல்லை உயிர்க்கு.*
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
குறள்: 232
*உரைப்பார் உரைப்பவை எல்லாம்* *இரப்பார்க்கொன்று*
*ஈவார்மேல் நிற்கும் புகழ்.*
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
குறள்: 233
*ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்*
*பொன்றாது நிற்பதொன் றில்.*
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
குறள்: 234
*நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்*
*போற்றாது புத்தேள் உலகு.*
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
குறள்: 235
*நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்*
*வித்தகர்க் கல்லால் அரிது.*
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
குறள்: 236
*தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்*
*தோன்றலின் தோன்றாமை நன்று.*
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸
குறள்: 237
*புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை*
*இகழ்வாரை நோவது எவன்.*
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.
💐🌷💐🌷💐🌷💐🌷💐🌷💐
குறள்: 238
*வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்*
*எச்சம் பெறாஅ விடின்.*
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻
குறள்: 239
*வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா*
*யாக்கை பொறுத்த நிலம்.*
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀
குறள்: 240
*வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய*
*வாழ்வாரே வாழா தவர்.*
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
🍁🍂🍁🍂🍁🍂🍁🍂🍁🍂🍁
திருவள்ளுவர் புகழ் என்ற அதிகாரத்தை அப்துல் கலாம் ஐயாவுக்குகாக ஏழுதியிருப்பதாக தோன்றுகிறது
*🌹அப்துல் கலாம் ஐயாவின் சிந்தனைகள்:*🌹
1. முடியாது என்ற நோய்
“கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது.
வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத்தின் துணை கொண்டு வெற்றியைகாண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்
மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான்.
மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப்பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
3. உறுதியும், நம்பிக்கையும்
உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
4. சிந்தனை செய்
இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்! “புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
5. ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
6. “கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீயரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
💥💥💥💥💥💥💥💥💥💥💥
8. இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”
🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻
9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.
🌿🌴🌿🌴🌿🌴🌿🌴🌿🌴🌿
10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்
உங்களை மேன்மேலும் மெருகூட்ட சில வரிகள்
நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”
எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
தோற்ற்றம் - மறைவு
அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து ஜூலை 27, 2015 அன்று இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) இறைவனடி சேர்ந்தார்.
We are looking for serious kdney donors for sum of 3 crore,For more info Email: healthc976@ gmailcom
பதிலளிநீக்குCall or whatsapp +91 9945317569