
பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும்.
அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான வழிமுறைகள் இதோ.

புருவங்களின் முடி வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தடவலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

எண்ணெய் தடவுவதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது.

தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் ‘திரெடிங்’ முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் ‘வாக்சிங்’ முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது. இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது.

பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை வடிவமாக செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களில் முடி விரைவாகவும், மிகவும் திக்காகவும், தாறுமாறாகவும் முறையற்றும் வளரும்.

புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமையாக்கலாம். மஸ்காரா பிரஷ்சை காயவைத்து லேசாக நரைமுடிகளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை காட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக