செவ்வாய், 17 ஜூலை, 2018

நீங்க தூங்கறதை வச்சே உங்க பர்சனாலிட்டியை சொல்லிடலாம் தெரியுமா?


நீங்க தூங்கறதை வச்சே உங்க பர்சனாலிட்டியை சொல்லிடலாம் தெரியுமா?

  காலங்காலமாக சக மனிதர்களின் குணங்களை புரிஞ்சு அவர்களுக்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து வாந்தா உலகத்தில் சண்டை சச்சரவு என எதற்கும் இடமில்லை. அதுவும் நொடிக்கு ஒரு குணம், உணர்வுகள் என காமிக்கறதுல்ல மனிதர்களை மிஞ்ச உலகத்துல ஒரு ஜீவனும் இல்ல.
 இன்னைக்கு சரின்னு சொன்ன ஒரு விஷயத்தை நாளைக்கு தப்புன்னு சொல்லி வாதாடுவாங்க. இதென்னடா, இவங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலைன்னு மண்டைய பிச்சுக்கற பலபேருக்கு இந்த கட்டுரை ஒரு சோளப்பொறி அல்லது அனில் மாதிரி உதவும்.
 எல்லாருக்குமே தூங்கும்போது ஒரே மாதிரியான பொஸிஷனில்தான் தூங்குவார்கள். வேற எப்படி பொஸிஷன் மாற்றினாலும் அவர்களின்
தூக்கம் போய்விடும். சைக்காலஜிஸ்ட் ஒருவர் தூங்கும் நிலையை வைத்தே அவர்களின் பெர்சனாலிட்டியை சொல்லிவிடலாம் என
கூறுகிறார்கள். அப்படி நீங்க எந்த மாதிரி தூங்கறீங்க? உங்க பெர்சனாலிட்டி எப்படின்னு பாக்கலாமா?

குறுக்கி படுப்பவர்கள் :
நீங்க காலையெல்லாம் குறுக்கி வயித்துல இருக்கிற குழந்தை மாதிரி படுப்பவரா இருந்தா, ரிசர்வ்டு டைப்பா இருப்பீங்க. சமூக பிரச்சனையிலோ,வெளிபிரச்சனையிலோ தலை நீட்ட மாட்டீங்க. தானுண்டு, தன் வேலையுண்டு கேரக்டர் நீங்க.
நேராக படுப்பவர்கள் :
நீங்க நேரா படுக்கறவரா இருந்தா, ரொம்ப சிம்பிளான ஆளுங்க. புத்திசாலியாவும் இருப்பீங்க. எப்படி வாழ்க்கையை எடுத்துகிட்டுபோலாம்னு தெரிஞ்சு வச்சிருப்பீங்க. வாழ்க்கைல ஏதாவது சாதிக்கனும்னு மனசுல ஆசையோடு இருப்பீங்க.

குப்புற படுத்தல் :
குப்புற படுப்பவங்க பிடிவாதக்காரர்களாக இருப்பீங்க. உங்க லைஃப் பார்ட்னர் ஏதாவது உங்களுக்கு கிஃப்ட் கொடுத்துட்டே இருக்கனும்னு ஆசைப்படுவீங்க. எப்பவும் உம்முன்னு போரடிக்கற மனுஷங்களை உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உங்க கூட இருக்கிறவங்களுக்கும் உங்களை மாதிரியே ஆக்டிவா இருக்கனும்னு நினைப்பீங்க.

இடது பக்கம் படுப்பவர்கள் :
உங்களுக்கு அடிக்கடி நடக்கிற மாற்றங்கள் பிடிக்காது. நல்லா பேசுவீங்க. அதே சமயம் உங்க பழக்கவழக்கங்களும் சுத்தமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.

கையை மார்பில் வச்சு படுப்பவர்கள் :
சிலர் கையை மார்பில் வச்சுக்கிட்டு தூங்கறவங்க எப்போதும் குடும்பத்துக்கு மரியாதை தருவீங்க. அவர்களுக்காக எதையும் செய்வீங்க. உங்களுக்கு கிடைக்கற வாழ்க்க துணை ரொம்ப அழகா இருக்கனும்னு நினைப்பீங்க.

தலையணையை கட்டிப்பிடிச்சு படுப்பவர்கள் :
தலையணையை கட்டிப்பிடிச்சு தூங்கினா நீங்க அடுத்தவங்களை சீக்கிரம் நம்பிடுவீங்க. அதனால ஏதாவது ஏமாற்றம் வந்துச்சுன்னா, அதை எல்லார்ட்டையும் சொல்லி புலம்பறதே வேலையா செய்வீங்க.
இழுத்து போர்த்தி படுப்பவர்கள் ;
உச்சி முதல் உள்ளங்கால் வரை இழுத்து போர்த்தி நீங்க படுப்பவரா இருந்தா நீங்க சரியான அம்மா கோண்டு. வீட்டை விட்டு வெளியே போகவே பிடிக்காது. லீவு விட்டா ஊர் சுத்தறதை விட வீட்ல இருப்பதைதான் விரும்புவீங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக