செவ்வாய், 3 ஜூலை, 2018

கலராக்கும் அரிசிமாவும் தயிரும்!

அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்!

நாள் முழுக்க வெளியில் அலைந்து விட்டு, வீட்டுக்குள் வந்ததுத் கண்ணாாடியைப் பார்த்தால் நமக்கே நம்முடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காது. ஏனென்றால், வெயில், மாசு, தூசிகள் என முகம் அழுக்கு படிந்து, கருமையாகத் தோற்றமளிகும். இப்படி இருக்கும் முகத்தை பார்த்தால் மனதில் புத்துணர்வு எப்படி உண்டாகும். எந்த வுலையும் செய்யத் தோன்றாது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் இருக்கா?... இத எப்படிதான் சரி பண்றது?... 

மூஞ்சிய தூக்கி வெச்சிக்கிட்டு கவலைப்பட்டுகிட்டு உட்கார்ந்திருக்காம, மொதல்ல கிச்சனுக்குள்ள போங்க... பத்தே நிமிஷத்துல உங்க முகம் பளபளக்கும் வித்தை அங்கே தான் இருக்கிறது. ஆமாங்க... உடனடியாக முகத்தை கலராக்கும் ஒரு பொக்கிஷம் இங்கே தான் இருக்கிறது. அது தான் அரிசி மாவு. ஆமாங்க அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். 

பயன்கள்
முகம் பளபளப்பாக இருந்தாலே மன அழுத்தங்கள் நம்மை விட்டு வெகுதூரம் ஓடிப்போய் விடும்.
தூசிகளால் சருமத்துளைகளுக்குள் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிற மிகச்சிறந்த ஸ்கிரப்பாக அரிசி மாவு பயன்படுகிறது.
விசேஷங்களுக்கு செல்லும் போது முகத்தில் தடவுகிற பவுண்டேஷன் உங்கள் சருமத்துக்கு கொடுக்கும் பளபளப்பை உடனடியாக அரிசி மாவு உங்கள் சருமத்துக்குக் கொடுக்கும்.
முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிக்கும். ஆம். அரிசி மாவு நிச்சயம் உங்கள் சருமத்தி்ல மிகப்பெரிய மேஜிக்கை செய்யும்.

அரிசி மாவு பேஸ்ட்
அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. வேகவைக்காத பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. அதை பேஸ்டாக்குவதற்கு சிறிது தண்ணீரோ அல்லது சிறிது பாலோ சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசி கழுவிய நீர்
அதேபோல், அரிசியை கழுவிய நீர் இருக்கிறதல்லவா அது அழுக்கு என்று மட்டும் கீழே கொட்டிவிடாதீர்கள். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நீரைக் கொண்டு முகம் கழுவலாம். குளிக்கும் தண்ணீரோடு சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி குளிக்கவும் பயன்படுத்தலாம்.

எப்படி சருமம் கலராகிறது?
நாம் போடாத விலையுயர்ந்த க்ரீம்கள் இல்லை. வீட்டு வைத்தியமும் செய்து பார்த்தாச்சு. அதப்படி அரிசி மாவு மட்டும் உடனடியாக சருமத்தைக் கலராக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இது எப்படி என்று பார்ப்போம்.
அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனா நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது. இந்த அமிலம் நம்முடைய உடலில் வைட்டமின் சி யை அதிகப்படுத்தும்.
அதேபோல், ஃபெருலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது சூரிய கதிர்களிடம் இருந்து நம்முடைய சருமத்தைக் காப்பாற்றும். வைட்டமின் சி மற்றும் ஈ செய்யும் இரண்டு வேலையையும் சேர்த்து இந்த அரிசி மாவு நமக்கு செய்கிறது.
அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். இதிலுள்ள வைட்டமின் பி சருமத்தை எளிதில் வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.

அரிசி மாவும் தயிரும் அரிசி
மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு பிளீச்சாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது. தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை
அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டையும் ஒரு பௌலில் போட்டு, கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதை புருவம், கண்களைச் சுற்றி, உதட்டுப் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள்.
பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்ககள். நனகு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட்டு உங்களுடைய முகத்தை நீங்களு கண்ணாடியில் பாருங்கள்.
நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். முகம் புத்துணர்வோடு கூடுதல் நிறமும் பெற்றிருப்பதை உணர்வீர்கள். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து பாருங்கள். சூப்பர் ரிசல்ட் கிடைக்கும் உங்களுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக