செவ்வாய், 17 ஜூலை, 2018

வீட்டில் எளிதாக செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள்...

வீட்டில் எளிதாக செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள்...

1. தயிருக்கு நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்க வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராக இருக்கும்.
2. இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரித்து மறந்துபோன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர முடியும். இந்த இடத்தில் நினைவாற்றலுக்கான அக்குப் ஃப்ரஷர் புள்ளிகள் உள்ளது.
3. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டிக்கொண்டால் பேன், பொடுகு, ஈர் போன்றவைகள் அனைத்தும் போய்விடும்.
4. கேரட், இஞ்சி சூப்பை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும் வரை பசியே எடுக்காது.
5. தினமும் மோரை முகத்தில் தடவி காயவிட்டு கழுவினால் எண்ணெய்பசை குறைந்து கருமையும் குறையும்.

6. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கை அல்லது வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி கண்களின் மேல் 20 நிமிடம் வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக