வியாழன், 19 ஜூலை, 2018

அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா? வாங்க பார்க்கலாம் ...

அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா? வாங்க பார்க்கலாம் ...

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.குடல் இறக்க நோய் :

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.உடல் எடை :

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.கருப்பு கயிறு :

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்.

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக