நாம சின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழம் பித்த நீர், மூல பிரச்சனைகளை குணப்படுத்துகிறதாம்..!
பள்ளிக்கூடத்துக்கு வெளியில எப்போவும் ஒரு தள்ளுவண்டிக்காரர் இந்த பழத்தை கூவி கூவி வித்துட்டு இருப்பார். அப்போ அதனுடைய ஆரோக்கிய பயன்கள் தெரியாமலையே சாப்பிட்டு இருப்போம். ஆனால் இலந்தை பழத்துக்குள் ஒரு பெரிய மருத்துவ குறிப்பே இருக்குனு ஆராய்ச்சிகள் சொல்லுதுங்க. சரி, வாங்க என்னென்ன மருத்துவ பயன்கள்னு தெரிஞ்சிக்கலாம். வைட்டமின் எ,பி,சி,டி போன்றவை கண்களுக்கும், பற்களுக்கும், இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அதிக பயன் தர கூடியவை. மேலும் இதில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகை போன்ற நோய்களை குணப்படுத்தும். எப்போதுமே அந்தந்த கால நிலையில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவதே உடலுக்கு அதிக நலனை தரக்கூடும்.
credits:Vikipeedia
பித்த நீர் பித்தம் அதிகம் உடலில் சேர்ந்தால் பல்வேறு உடல் உபாதைகளை உருவாக்கும். பசியின்மை, வயிற்று கோளாறு ஆகியவை இந்த பித்த நீர் பிரச்சனையால் வரக்கூடியவை. இலந்தை பழம் உடலில் அதிகப்படியாக உள்ள பித்த நீரை குறைக்க வழி செய்கிறது. அதோடு சேர்த்து தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது. இதனால் ரத்தம் சீர்கேடு அடையாமல் பாதுகாக்க முடியும். விழுந்தவுடனே எலும்பு முறிவு ஏற்படக்கூடியவர்கள் இதனை சாப்பிட்டால் எலும்புகள் உறுதியடையும். மேலும் மூளையின் ஆற்றலை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பை தரும். கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்தும்.
credits:AtPerry's
இப்போதெல்லாம் மிக சிறிய வயதிலேயே அதிக பேருக்கு வர கூடிய பிரச்சனை இளநரைத்தான். இலந்தை இலையில் இளநரைகளை கருப்பாகும் தன்மை உள்ளது.இது வெள்ளை முடிகள் வளர்வதை தடுக்க செய்கிறது. மேலும் முடியின் போஷாக்கை அதிகரிக்கிறது.மாதவிடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு ஏற்பட கூடியவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டால் ரத்த போக்கு சீராகும். அத்துடன் மாதவிடாயின் போது ஏற்பட கூடிய வயிற்று வலியையும் சரி செய்யும். மாதவிடாய் முற்றிலுமாக நிற்க போகும் மெனோபாஸ் காலகட்டத்தில் அதிக உதிர போக்கு இருந்தால் இலந்தை சாப்பிட்டாலே நின்று விடும். மாதவிடாய் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு இலந்தை உற்ற நண்பனாய் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக