வெள்ளி, 27 ஜூலை, 2018

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்


காய்கறிகள் மற்றும் கீரைகளை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதொன்று. ஏனெனில், நாம் கடைகளில் வாங்கும் மரக்கறி மற்றும் கீரையில் பூச்சிகள் இருக்கும்.

சில வேளைகளில் இந்தப் பூச்சிகள் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், அது போன்றதொரு சம்பவம் நிஜத்திலும் நிகழ்ந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் மரக்கறிகள் மற்றும் கீரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை.

சமையல் செய்ய ஆயத்தமாவதற்கு 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரம் ஒன்றில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கொள்ளவும். கீரையை கட்டிலிருந்து ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள். பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு மற்றும் பூச்சிகள் இருந்தால் இறந்து விடும்.

மரக்கறி வகைகளை எவ்வாறு சுத்தம் செய்வது?
எந்த மரக்கறியாக இருந்தாலும் சரி, அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வதற்கு முன்னர் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் அதனை உப்பு கலந்த நீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், மரக்கறிகளில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.

1 கருத்து:

  1. We are looking for serious kdney donors for sum of 3 crore,For more info Email: healthc976@ gmailcom
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு