தூக்கி எரியும் தேங்காய் மூடியில் இவ்ளோ விஷயம் இருக்கா? இனி பத்திரமா வச்சிப்பீங்க...
நரைமுடி என்பது நாற்பது வயதுக்கு மேல் தான் வந்து கொண்டிருந்தது ஆனால் தற்போது இளம் வயதில் இன்னும் சிலருக்கு கல்லூரி காலங்களில் கூட நை முடி பிரச்னை துவங்கி விடுகிறது. இந்த பிரச்சனையை பலரும் ரசாயண முறைகளிலேயே சரி செய்ய முயல்கின்றனர்.
கலப்படம் இல்லாத கெமிக்கல், இயற்கை சாயம் எனும் பெயர்களில் தலைக்கு தேய்க்கும் சாயங்கள் வந்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிக அதிகம் குறிப்பாக பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் முகம் கருப்பாக மாறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சில தேங்காய் மூடிகள் மற்றும் கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்துகொள்ளவும். "தேங்காய் மூடியை சுட்டு கரியாக்கி பின் அந்த பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து" சில நாட்கள் வெயிலில் நேரடியாக படும்படி வைக்கவும். பிறகு அந்த கலவையை எடுத்து தலையில் தடவி அப்படியே வைத்துக்கொள்ளலாம்
அல்லது தலையை கழுவ விரும்பினால் சில மணி நேரங்களுக்கு பின்பு கழுவி கொள்ளலாம். இந்த முறையின் மூலம் சில தினங்களில் நரைமுடி மறைவதை காணலாம் மேலும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக