ஆடியில் தள்ளுபடி விற்பனை வந்தது எப்படி ?
ஆடி தள்ளுபடி தமிழகத்தில் வியாபார ரகசியமாகும், நுகர்வோரின் அவசியமாக ஆகி மக்களோடு இரண்டற கலந்துவிட்டது. பொதுவாக ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் நடத்தப்படுவதில்லை. இதனால் வியாபாரம், தொழில்கள் அனைத்துமே முடங்கி மந்த நிலையில் காணப்படும். அப்போது கடை வீதிகளில் வெறிச்சோடி காணப்படும்.
இந்த வியாபாரம் வாட்டத்தை போக்க, வியாபாரிகள் கண்ட ஒரு புதுமையான வழியே ஆடிக்கழிவு. இதன் மூலம் தேங்கிய சரக்குகளை விரைவாக விற்பனை செய்ய முடியும். தீபாவளி பண்டிகை சரக்குகளை கொள்முதல் செய்ய தேவையான நிதிநிலையையும் வியாபாரிகள் தேற்றிக்கொள்ள முடியும்.
ஆடி தள்ளுபடி விலையை அறிமுகப்படுத்தியதே நெல்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல துணிக்கடைதான் முதன் முதலில் ஆடி மாதத்தில் தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனையை தொடங்கியதாக கூறப்படுகிறது.. அங்கு கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து, எல்லா கடைக்காரர்களும் அதனை பின்பற்ற தொடங்கி விட்டனர்.. 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக