நகைகள் அணிவதால் ஆயுள் விருத்தி உண்டாகும்...
♥நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
♥இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன. அந்த வகையில் நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.
♥வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
♥நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொலுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
♥நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
♥தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மைகள் உண்டாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக