அம்மா மருத்துவ காப்பீட்டு திடத்தில் இவ்வளவு நன்மைகளா இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா.
அம்மா மருத்துவ காப்பீட்டு திட்டம்
அம்மா காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்துகிறீர்களா என்றால்? இல்லை என்ற பதில் தான் நிறைய வரும் என் என்றால் மக்களுக்கு இந்த திடத்தைப்பற்றி விழிப்புணர்வு இல்லை.
இந்த திடத்தை எப்படி பயன்படுத்துவது ?
இந்த திட்டம் தமிழாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள அரசால் அளிக்கப்பட்ட (Old Ration Card) பழைய ரேஷன் அட்டை மற்றும் (New Smart Card) புதிய ஸ்மார்ட் கார்டு,(Aadhaar Card) ஆதார் கார்டு அல்லது (OAP) ஓய்வூதிய அட்டை கொண்டு இந்த திடத்தை பயன்படுத்தலாம்.
இதன் மூலமாக எந்தெந்த சிகிச்சைபெறமுடியும் ?
இதன்மூலமாகமொத்தம் 1027 சிகிச்சைபெறமுடியும்மேலும்அரசுஒதுக்கீடுசெய்யப்பட்ட சிகிச்சையாக 158-ம்
கண்டறிதல் நடைமுறைகள் 38-ம்,திரும்ப பரிசோதனை செய்ய 154-சிகிச்சைகளும் உள்ளன.
இதில் நாள்பட்ட சிகிச்சைகளும்,(பித்தப்பை கல்,குடல் இறக்கம்,கருப்பை அகற்றம்)போன்ற சிகிச்சைகளும்,அவசரகால சிகிச்சையாக விஷமுறிவு போன்ற சிகிச்சையும், மென்மையான காயம் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காது கேளாமல் இருப்போர்க்கு இலவச காது கருவிகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் கருவுறும் பெண்களுக்கு பேறுகால இலவச சோதனையும் செய்யப்படுகிறது.இதன் மூலம் வருடம் ஒரு லட்சம் வரை சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
எப்படி கருத்து மற்றும் புகார்தெரிவிப்பது ?
அம்மா மருத்துவ காப்பிட்டு திட்டத்தில் நீங்கள் 1 ரூபாய் கூட பணம் செலுத்த தேவை இல்லை, உங்களிடம் இந்த திட்டத்தில் பணம்பெற முயன்றால் [ 1800-425-3993 ] என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உங்களிடம் மருத்துவமனை பணம்பெற முயன்றால் அரசால் அளிக்கப்பட்ட அங்கிகாரம் ரத்து செய்யப்படும்.
( மேலும் தகவலுக்கு கமெண்ட்செய்யவும் கண்டிப்பாக உங்களுக்குநான் உதவி செய்கிறேன் மேலும்இதனை ஷேர் பண்ணவும்அனைவருக்கும் இது பயன் உள்ளதாகஇருக்கும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக