செவ்வாய், 19 ஜூன், 2018

பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ்

பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் 
இயற்கை வைத்தியம்:-பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு

குணமாகும்.மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும். வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம். குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
பிரச்சினை தரும் பித்த வெடிப்பு
பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.
இருப்பினும் பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகளும் இருக்கத் தான் செய்கிறது. இதனால் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு சிதைவுகளும் உண்டாகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளினால் கூட சில நேரங்களில் பித்த வெடிப்பு உண்டாகலாம். பாதங்களை நல்ல அக்கறையுடன் கவனித்து கொண்டு பித்த வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும்.
அப்படி செய்யாமல், வலி வரும் வரை காத்திருந்து அதன் பின் அதற்கு சிகிச்சை எடுக்கும் கஷ்டம் எதற்கு? ஒரு வேளை, பித்த வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை நீங்கள் கடந்திருந்து ஏற்கனவே வலி உண்டாகியிருந்தால், அதற்கு பல வீட்டு சிகிச்சைகள் இருக்கிறது.
அவைகளை பின்பற்றினால் உங்கள் பித்த வெடிப்புகள் குணமாகும். உங்கள் பித்த வெடிப்புகள் குணமான பிறகு, அது மீண்டும் வராமல் தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் மொத்த எடையையும் தாங்கும் விதமாக உங்கள் பாதத்தின் தோல் கடுமையானதாக இருக்கும்.
மெருகேற்ற உதவும் கல்/ஸ்கரப்பர்
பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது நுரைக்கல்லை பயன்படுத்தி உங்கள் பாதத்தில் உள்ள செத்த அணுக்களை மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவிக் கொள்ளுங்கள். அதனை பாதங்கள் உறிஞ்சிட வேண்டும் என்பதால் ஒரு 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
ஈரப்பதத்தை நீட்டிக்க செய்திட இரவு நேரங்களில், ஏன் பகல் முழுவதும் கூட பாதங்களுக்கு காலுறைகளை அணிவித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு இதனை தினமும் ஒரு முறை செய்தால், அதனால் ஏற்பட போகும் மாற்றத்தை கண்டு வியப்பீர்கள்.
பாத மாஸ்க்
ஒரு பெரிய வாளி ஒன்றை எடுத்து அதில் வெப்பமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதனுள் முக்கிக் கொள்ளுங்கள். உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரின் பயன்பாடும் பின் தேவைப்படும். 15-20 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்கள் இந்த நீரில் ஊறட்டும். பின் உரைக்கல் அல்லது பாத ஸ்கரப்பரை கொண்டு உங்கள் பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.
1 டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து உங்கள் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிடுங்கல்.
தேன் கலவை
உங்கள் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க தேன் பெரிதும் உதவி செய்யும். மேலும் தேனில் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளது. 2-3 டீஸ்பூன் அரிசியை எடுத்து, அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் பித்த வெடிப்புடன் வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அந்த பேஸ்ட்டை வைத்து மெதுவாக பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.
தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்
பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கூட பாதங்களில் மெதுவாக தடவலாம். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். இதனை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், உங்கள் பித்த வெடிப்புகளுக்கு நல்ல பயனை அளிக்கும்.
குறிப்பு: மேற்கூறியவற்றை தினமும் நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக