வெள்ளி, 22 ஜூன், 2018

திராட்சை விதையையும் சேர்த்து சாப்பிடுங்க.. இதற்கெல்லாம் நல்லது

திராட்சை விதையையும் சேர்த்து சாப்பிடுங்க.. இதற்கெல்லாம் நல்லது

திராட்சையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. ஆனால் பலருக்கும் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் தூக்கி எறிந்துவிடுவோம். இதற்கு திராட்சை விதையின் நன்மைகளைப் பற்றி நமக்கு தெரியாமல் இருப்பதே காரணம்.திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாவர வகை உட்பொருட்களான OPCs உள்ளன. இந்த OPCs உடலில் ப்ரீ ராடிக்கல்களை அழிக்க உதவுவதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும் மற்றும் குறிப்பிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தடுக்கும். பாரம்பரிய மருத்துவத்தில் திராட்சை விதையின் சாறு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள், பெருந்தமனி தடிப்பு, உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. சரி, இப்போது திராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
உயர் இரத்த அழுத்தம் 
திராட்சை விதைகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர இதய பிரச்சனைகளின் தாக்கமும் குறையும். மேலும் திராட்சை விதைகளில் உள்ள உட்பொருட்கள், உடலில் வைட்டமின் சியின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும் செயல்பாட்டை வேகப்படுத்தும்.
நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்
திராட்சை விதைகளில் உள்ள ப்ளேவோனாய்டுகள், உடலில் வைட்டமின் சியைத் தூண்டிவிடுவதோடு, திராட்சை விதைகளில் மிதமான அளவில் வைட்டமின் ஈ சத்தும் நிரம்பியுள்ளது. வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் சி-யை விட 30-50 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
வீக்கத்தைத் தடுக்கும் 
நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்பவர்கள், தினமும் திராட்சையை விதையுடன் சாப்பிட்டு வந்தால், அது கால்களில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கும். இப்படி உடலில் அதிகமாக தேங்கும் திரவம் வலிமிக்கதாக இருக்கும். ஆனால் இந்த வலியை திராட்சை விதையை சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.
எடை குறைவை ஊக்குவிக்கும் 
திராட்சை விதைகளினால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இது உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும். திராட்சை விதையை சாப்பிட்டால், அது உடலின் ஆற்றலை மேம்படுத்தும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை வேகமாக குறையும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
திராட்சை விதைகளில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சமநிலையில் பராமரிக்கும். இதன் விளைவாக தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து ஏற்படும் அபாயம் குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய்களின் அபாயமும் குறையும்.
மூளையின் செயல்பாடு
தூண்டப்படும் திராட்சை விதைகளில் உள்ள OPCs அறிவாற்றல் செயல்பாட்டைத் தூண்டி, மனதை ஒருமுகப்படுத்தும் திறன், நினைவாற்றல், நல்ல மனநிலை போன்றவை மேம்படும். முக்கியமாக திராட்சையை விதைகளுன் சாப்பிட்டால், அது அல்சைமர் நோய் மற்றும் நரம்பு சிதைவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே உங்கள் அறிவாற்றல் சிறப்பாக இருக்க நினைத்தால் திராட்சையை விதையுடன் சாப்பிடுங்கள்.
புற்றுநோயைத் தடுக்கும்
திராட்சை விதையை சாப்பிட்டால், அது சரும புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்கும் மற்றும் சருமத்தில் கட்டிகள் உருவாகி வளர்ச்சி அடைவதைக் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. திராட்சை விதைகள் மார்பக புற்றுநேய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் எதிர்த்துப் போராட உதவும். இந்த விதைகள் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் செல்லுலார் பாதிப்பைத் தடுக்கும்.
நுரையீரலைப் பாதுகாக்கும் 
திராட்சை விதைகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் பண்புகள், அலர்ஜியை எதிர்த்துப் போராடவும், நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் இதர நோய்களைத் தடுத்து பாதுகாத்து, அதன் செயல்பாட்டை சிறப்பாகவும் வைத்துக் கொள்ளும். திராட்சை விதைகளை சாப்பிட்டால், அது சளி, காய்ச்சல் போன்றவற்றின் அபாயத்தைக் குறைத்து, சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது திராட்சை விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுத்து, பல்வேறு வகையான தொற்றுக்களைத் தடுக்கும். இந்த விதைகளில் இருக்கும்
அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
ஆர்த்ரிடிஸ், திரவ தேக்கம், அல்சர், சைனஸ் பிரச்சனை மற்றும் சிறுநீரக பாதை தொற்றுக்களின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.
திராட்சை விதைகள் எப்படி சாப்பிடலாம்?
திராட்சை விதைகளை நற்பதமான பழங்களை சாப்பிடும் போதோ அல்லது திராட்சை விதையின் சாறு அல்லது கேப்ஸ்யூல் போன்ற வடிவிலோ உட்கொள்ளலாம். இன்னும் சிறப்பான வழிகளில் என்றால், திராட்சை விதையின் சாற்றினை ஸ்மூத்தி, சூப், காக்டெயில் போன்றவற்றுடன் சேர்த்து எடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக