சனி, 16 ஜூன், 2018

தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் அதனால் ஏற்படும் தீமைகள்

தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் அதனால் ஏற்படும் தீமைகள்

ஊறுகாய் நாம் தினமும் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது.ஊறுகாயில் மசாலா சேர்க்கப்படுவதால் வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். 
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை சாப்பிடவே கூடாது. இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் தினமும் சாப்பிட கூடாது. 
ஊறுகாயில் எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு அதிகம் சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும் இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.ஊறுகாயில் உள்ள எண்ணெய் இதய நோயை உண்டாக்கும்.
ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் வலி, வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் இருப்பவர்களும் ஊறுகாயை சாப்பிடக்கூடாது. ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக