15 நிமிடத்தில் கருப்பான முகத்தை கலராக்க வேணுமா.?
கருப்பான முகத்தை கலராக்க நம்மவர்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். ஆனால் நம்ம வீடு சமையல் அறையிலேயே எளிமையான தீர்வு இருக்கிறது.
அந்த அற்புத மருந்து எது தெரியுமா? நல்லெண்ணெய் … ஆம். அதன் பெயரிலேயே இருக்கிறது 'நல்ல' எண்ணெய் என்ற அதன் அருங்குணம்.
சரும பிரச்னைகளுக்கு பல அற்புத தீர்வுகளை தருகிறது இந்த நல்லெண்ணெய். கூந்தல் பிரச்னைகக்கும் சிறப்பான பலனை கொடுக்கிறது. வறட்சியான சருமமோ, எண்ணெய் வழியும் சருமமோ எந்த சருமமாக இருந்தாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும்.
நல்லெண்ணெய்யில் தான் பல அழகு க்ரீம்கள், ஆயின்மெண்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப்களில்ப பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
முகத்தில் கருமை நீங்கணுமா?
சிலருக்கு கருமை நிறம் தாழ்வு மனப்பான்மையை தருகிறது. இன்னும் சிலருக்கு கோடை வெயிலில் வெளியே சென்று வரும்போது முகம் கருப்பதால் மனம் சஞ்சலப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் சிகிச்சை பெரிதும் உதவியாக இருக்கும்.
ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இதனை ஒரே ஒரு முறை செய்து பாருங்க. நீங்களே ஆச்சரிய படுவீங்க.
இதனை ஒரே ஒரு முறை செய்து பாருங்க. நீங்களே ஆச்சரிய படுவீங்க.
கருவளையம் நீங்கனுமா?
உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்
முகப்பரு உள்ளதா?
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.
சரும வறட்சியா?
பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக