அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது எலுமிச்சை பழம்
எலுமிச்சையில் பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும். உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது.
தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்படும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால் அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே, வாத நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் நல்லது. எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும்.
எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக