ஞாயிறு, 17 ஜூன், 2018

இளநீர் பற்றி சில உண்மைகள்! உங்களுக்கு தெரியாது

இளநீர் பற்றி சில உண்மைகள்! உங்களுக்கு தெரியாது

இளநீரில் இனிப்பு மற்றும் உப்பு உள்ளது. இளநீரில் 94% தண்ணீர் மற்றும் அதிக அளவு கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இளநீரின் அருமையான நன்மைகள்:
1. ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது
இளநீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளது.
  • 9 கிராம் கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்துக்கள் 3 கிராம்
  • புரத சத்துக்கள்  2 கிராம்
  • 46 கலோரிகள்
  • வைட்டமின் சி
  • மெக்னீசியம்
  • பொட்டாசியம்
  • சோடியம்
  • கால்சியம்
2. உடல் எடை குறைய உதவுகிறது
இளநீரில் கலோரிகளில் குறைந்த அளவே இருக்கிறது. எனவே மற்ற பானங்களை வாங்கி அருந்துவதை விட இளநீர் வாங்கி பருகுங்கள். மேலும், இளநீரில் உயர் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இவை இளம் வயதினராக இருக்க உதவுகிறது.
3. ஆன்டி ஆக்ஸிடன்ட்
வளர்சிதை மாற்றத்தின் போது நிலையற்ற செல்கள் தோன்றும். பல ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உள்ளது. இவற்றை சரி செய்ய இளநீர் அற்புதமான மூலம்.
4. தாது சத்துக்கள் நிறைந்துள்ளது:
இந்த ருசியான பானத்தை மற்ற பானங்களுடன் ஒப்பிடவே கூடாது.ஏனெனில் உயர் எலக்ட்ரோலைட் மற்றும் பல தாது சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • மெக்னீசியம்
  • சோடியம்
  • கால்சியம்
  • பொட்டாசியம்
5. சிறுநீரக கற்களை தடுக்கிறது
சிறுநீரக கற்களைத் தடுக்க நீர் நிறைய குடிப்பது அவசியம். இளநீர் ஒரு அற்புதமான இயற்கையில் கிடைக்கும் பானம்.
சிறுநீரகங்களில் அதிக கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் இதர சேர்மங்கள் சேர்ந்தால் சிறுநீரக கற்கள் உருவாகும். இளநீர்  சிறுநீரகத்தில் படியும் அசுத்தகங்கள் அனைத்தையும் நீக்குகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக