புதன், 27 ஜூன், 2018

முருங்கை விதைகளில் உள்ள 10 நன்மைகள்

முருங்கை விதைகளில் உள்ள 10 நன்மைகள்

முருங்கைக்காயில் இருந்து முருங்கை விதைகள் பெறப்படுகின்றன. முருங்கை கீரையில் உள்ள நன்மைகளை விட முருங்கைக்காய் விதைகளில் அதிகமாகவே உள்ளது.
முருங்கைக்காயை வேகவைத்து அல்லது வறுத்து உட்கொண்டால் பல நன்மைகள் உண்டு. முருங்கை விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
முருங்கை விதைகள் மிகவும் மென்மையானது. முருங்கை விதைகளை காய வைத்து சாப்பிட பல நன்மைகள் கிடைக்கும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது.
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பல வழிகளில் உடலுக்கு நன்மையளிக்கும் "என டாக்டர் கே மனோஜ் கூறுகிறார்.
முருங்கைக்காய் விதைகளில் உள்ள 10 நன்மைகள்:
1. தூக்கத்தை மேம்படுத்துகிறது:
ஒரே ஒரு முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி 15 நிமிடங்கள் சூடான நீரில் போட்டு கொதிக்க விடவும். 15 நிமிடங்கள் கழித்து படுக்கைக்கு செல்லும் முன் இந்த தண்ணீரை மட்டும் பருக இரவில் நல்ல தூக்கம் வரும்.
2. நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது:
முருங்கை விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் செரிமான அமைப்பு அற்புதமாக செயல்பட நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
3. இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்:
முருங்கை விதைகள் துத்தநாகத்தின் ( ஜிங்க் ) ஆதாரமாக உள்ளது மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஜிங்க் உதவுகிறது.
4. இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது:
இரத்தில் இரும்பு சத்துக்கள் குறைபாடு இருந்தால் இரத்த சோகையாக இருக்கலாம். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல இரும்பு சத்துக்கள் உதவுகிறது. 
5. மூட்டு வலியை குறைக்கிறது:
முருங்கைக்காய் விதைகளில் கால்சியம் நிறைந்து காணப்படுகின்றது. கால்சியம் மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுகிறது. வீக்கம் மற்றும் கடுமையான எலும்பு கோளாறுகளை குறைக்க உதவுகின்றன.
6. கொழுப்பை குறைக்கிறது:
முருங்கைக்காய் விதைகளில் நல்ல கொழுப்பு உள்ளது. கெட்ட கொழுப்பு உள்ள பாஸ்ட் புட் விட முருங்கைக்காய் ஆரயிம் மடங்கு மேல். தொப்பை குறைய வேண்டுமென்றால் முருங்கைக்காயை பயன்படுத்துங்கள்.
7. புற்றுநோய் செல்கள் அழிக்கிறது:
முருங்கை விதைகள் புற்றுநோய்களின் எதிர்விளைவுகளுக்கு நன்கு அறியப்பட்ட உணவு. முருங்கைக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கிறது.
8. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
முருங்கைக்காய் விதைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் மற்றும் இதய திசுக்களின் சேதங்களில் இருந்து நம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
9. எதிர்-ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது:
முருங்கைக்காய் விதைகள் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் கிட்டத்தட்ட 30 % உடலுக்கு தேவையான எதிர்-ஆக்சிஜனேற்றி கிடைக்கிறது. வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து நம் உடலை காப்பாற்ற எதிர்-ஆக்சிஜனேற்றி உதவுகிறது.
10. ஆரோக்கியமான சருமம்:
முருங்கைக்காய் விதைகளில் எதிர்-ஆக்சிஜனேற்றி, எதிர்-அழற்சி மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளால் நிரம்பியுள்ளது. முருங்கைக்காய் விதைகள் சரும பராமரிப்புக்கு மிகவும் பயன் படுகிறது. முருங்கைக்காய் விதைகள் மூலம் பெறப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவதால் சரும பிரச்சனைகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக