திங்கள், 18 ஜூன், 2018

உணவு இல்லாமல் மனிதன் எத்தனை நாள் உயிருடன் இருக்க முடியும்

உணவு இல்லாமல் மனிதன் எத்தனை நாள் உயிருடன் இருக்க முடியும்

ஒருவர் உயரம், உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதை கூறமுடியும்.
ஒருவர் உணவில்லாமல் வாழமுடியுமா என்றால் சிறிது நாட்கள் உணவில்லாமல் வாழ முடியும். ஆனால் உணவு இல்லாமலே வாழ முடியாது. அப்படி உண்ணாமல் இருந்தால் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அது மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும். 
72 மணி நேரத்திற்கு பிறகும் ஒருவர் உண்ணாமல் இருந்தால் உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை கரைய ஆரம்பித்துவிடும். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகிய இரண்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க தொடங்கி விடும். ஆனால் சிலர் 70 நாட்கள் வரை உண்ணாமல் உயிருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக