திங்கள், 18 ஜூன், 2018

உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்.

உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில கிராமத்து வைத்தியங்கள்.

மாதுளை ஜூஸ்
கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.
தண்ணீர்
உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவென்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமாக வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
எள்
உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
வெந்தயம்
இது பலரும் அறிந்த ஓர் முறையே. அது என்னவெனில் அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி தினமும் கோடையில் செய்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
பால் மற்றும் தேன்
உடல் வெப்பத்தைக் குறைக்க சிறந்த பானம் என்னவென்று நீங்கள் யோசித்தால், அது பால் மற்றும் தேன் கலவை தான். ஆம் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் வெப்பம் தணியும்.
சந்தனம்
சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். வேண்டுமானால், சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.
வெண்ணெய் மற்றும் பால்
ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.
வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
மோர்
கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
இளநீர்
கோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.
உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லவும் நன்றி வணக்கம். மேலும்  follow  பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக