டேபிள் மேனர்ஸ் தெரிந்து கொள்வோமா?*
* பொதுவாக விருந்துகளுக்குச் செல்லும்போது பலருக்கு இருக்கும் ஒரு பிரச்னை, ஸ்பூன் மற்றும் ஃபோர்கில் உணவுகளை எவ்வாறு சாப்பிடுவது? அவைகளை எப்படிக் கையாள்வது
* நம்மை விட வயதில் மூத்தவர்கள் அமரும்வரை நாம் நாற்காலியின் பின் காத்திருந்து பிறகு அமரவேண்டும். அமர்ந்த உடன் நாற்காலியை ஒலி எழுப்பாமல் மேஜையை அணைத்தபடி நகர்த்தி அமர வேண்டும். பிறகு மேஜையின் மீது வைத்துள்ள நாப்கினை (Napkin) எடுத்து மடியில் விரித்துக்கொள்ளவேண்டும். நமது கைகளை மடியிலோ அல்லது வேறுவிதமாகவும் வைக்காமல், முழங்கைகளை மேஜையின் மீது வைத்துகொண்டால், ஜென்டில் லுக் தரும். அமரும் போது கன்னத்தில் கைவைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
* விருந்துகளில் முதலில் பரிமாறப்படுவது சூப். சூப் அருந்தும் போது பெரியதாக வாயைத் திறக்காமல், அதே நேரம் சத்தம் வராமலும் முதுகு கூன் விழாமலும் சூப்பைக் குடிக்க வேண்டும். சூப் ஸ்பூனை வலது கைகளைக் கொண்டு உபயோகப்படுத்தவும். சூப் மேலே சிந்தாமல் இருக்க, நெக் நாப்கினை (Neck Napkin) அணிந்துகொள்ள வேண்டும். சூப் குடித்து முடித்த உடன் நெக் நாப்கினைக் கழற்றி மடித்து வைத்து விட வேண்டும்.
* பலரும் சாப்பிட தடுமாறும் ஓர் உணவு நான்-வெஜ். அதை சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு அதற்கேற்றவகையில் இடது கையில் ஃபோர்க் ஸ்பூனும் (Fork Spoon) வலது கையில் நைஃபும் வைத்துக் கொள்ளவும். தட்டில் பரிமாறப்படும் நான்-வெஜ் வகைகள் சூடாக இருந்தால் சாப்பிடுவது மிகவும் எளிது. ஏனெனில், சூடாக இருக்கும் நான்-வெஜ்ஜை ஃபோர்கால் எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும். அவை ஆற ஆரம்பித்தால் ஃபோர்கால் எடுப்பது சற்று கடினமாகிவிடும். நான்-வெஜ்ஜை எடுக்கும் போது, கத்தியால் சிறிய துண்டுகளாக்கி ஃபோர்க்கால் எடுத்து சாப்பிட வேண்டும்.
* மேஜையின் மீது வைக்கப்பட்ட உணவுகளில் உங்களுக்குப் பிடித்தமான உணவு தூரமாக இருந்தால், எழுந்து கையை நீட்டி இழுக்கக் கூடாது. அந்த உணவுக்கு அருகில் இருக்கும் நபரை மெதுவாக அழைத்து, ‘உணவை என் அருகே பாஸ் செய்யுங்கள்’ என்று சொல்ல வேண்டும். நீங்கள் கேட்கும் நேரத்தில் வேறு யாராவது அந்த உணவை எடுக்கவிருந்தால், அவர்கள் அதை எடுத்துவிட்டு உங்கள் பக்கம் தரும் வரை அமைதி காக்க வேண்டும்.
* ஸ்பூனால் எடுக்க முடிந்த காய்களை ஸ்பூனாலும், குத்தி எடுக்க முடிகிற நிலையில் இருக்கும் காய்களை ஃபோர்க்காலும் எடுத்து சாப்பிடுங்கள்.
* சேரில் நிமிர்ந்து உட்கார வேண்டும். தட்டுக்கு அருகே உங்கள் முகத்தைக் கொண்டு வந்து உண்ணக்கூடாது. அதற்கு பதில் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்பூனால் எடுத்து உண்ண வேண்டும். சாப்பிடும் போது வாயை மூடி சத்தம் வராமல் மெல்ல வேண்டும்.
* நீங்கள் உணவு அருந்தி முடித்துவிட்டால், உங்கள் மடியின் மீது இருக்கும் நாப்கினை டேபிள்மீது வைத்துவிட்டு அனைவரும் உணவு அருந்தும் வரை காத்திருப்பது நம் ஒழுக்கத்தைக் காட்டும்.
* மேஜையை விட்டு எழுந்திருக்க வேண்டுமென்றால் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்று சொல்லிவிட்டு எழுந்திருக்க வேண்டும். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
* உணவை ‘கட்’ செய்து உண்ணும் போது உங்கள் உடல் டேபிளுக்கு நெருக்கமாகவும், முழங்கைகளை டேபிள் அருகிலும் வைத்திருக்கவும்.
* சாப்பிடும்போது விக்கல் அல்லது இருமல் வந்தால், அமைதியாக ‘ஸாரி’ சொல்லிவிட்டு கர்ச்சீப்பால் வாயை அணைத்துக்கொள்ளுங்கள்.
* சாப்பிடும்போது உங்கள் பற்களின் இடையே உணவு மாட்டிக்கொண்டால், விரல்களை வாயில் வைத்து, அதை எடுக்க முயற்சிக்கக் கூடாது. ‘டூத்பிக்’ உபயோகித்து எடுக்கக் கூடாது.
வாஷ் ரூமுக்கு சென்று வாயை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* நீங்கள் பபிள்கம் சுவைத்துக்கொண்டே ஹோட்டலுக்கு செல்கிறீர்கள் என்றால், அவற்றைத் துப்பிவிட்டு பிறகே டேபிளில் அமர வேண்டும். அதைவிடுத்து, டேபிளில் பபிள்கமை ஒட்டுவதோ, சேரில் அமர்ந்த பின்னர் எழுந்து சென்று துப்புவதோ நல்ல பழக்கம் இல்லை.
டேபிளில் பரிமாறப்பட்ட உணவுகளில் உங்களுக்குப் பிடிக்காத உணவு ஏதேனும் இருந்தால், எந்த கமெண்டுகளும் சொல்லாமல், அதை எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அதே போல நீங்கள் குடிக்கும் சூப்பில் உப்போ அல்லது காரமோ குறைவாக இருந்தால், எந்தக் குறையும் சொல்லாமல் அங்கு வைத்திருக்கும் உப்பு, மிளகை உங்கள் தேவைக்கு ஏற்றாற் போல் பயன்படுத்துங்கள்.
🏵 *ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது, ‘தேங்க்யூ’ என்று சொல்லிவிட்டு புன்னகையோடு வெளியே வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக