புதன், 27 ஜூன், 2018

தேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?செஞ்சு பார்ப்போமா?

தேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா?செஞ்சு பார்ப்போமா?

இயற்கையாகவே சில பொருட்களில் நமது உடல் பிரச்சினைகளை சமாளிக்க கூடிய சக்தி உள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது வினிகர் மற்றும் தேனில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த இரண்டும் சேர்ந்த கலவை ஆர்த்ரிட்டீஸ், எடை இழப்பு மற்றும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை
வரலாறு வினிகர் மற்றும் தேனின் சிறப்பு இன்றளவில் மட்டுமல்ல பல ஆண்டு காலமாக பயன்பட்டு வருகிறது. பாபிலோனியர்கள் இந்த வினிகரை ஒரு பதப்படுத்தும் பொருளாக பயன்படுத்தி வந்தனர். பண்டைய கிரேக்கத்தில் சுமார் கி.மு. 400 ஆம் ஆண்டில், ஹிப்போகிரேட்ஸ் என்ற மருத்துவர் வினிகர் மற்றும் தேனை சளி மற்றும் இருமலை குணப்படுத்த பரிந்துரைத்து வந்தார். 
தேனின் சிறப்பு வெள்ளை சர்க்கரையில் இல்லாத நிறைய பொருட்கள் தேனில் உள்ளன.. தேனில் ஹேஸ்தமைன், விட்டமின் பி6, நியசின், ரிபோப்ளவின் மற்றும் இதர தாதுக்களும் அடங்கியுள்ளன. அதே நேரத்தில் மருத்துவ துறையில் மட்டுமல்ல தேன் அழகுத் துறையிலும் சருமத்திற்கு போதிய ஈரப்பதத்தை கொடுக்கவும், வயதான தோற்றத்தை போக்கவும் பயன்படுகிறது. நீங்கள் தொடர்ந்து 2 மாதங்கள் தேனை பயன்படுத்தி வந்தால் உங்கள் சரும நிறம் இரு மடங்கு நிறமேற்றம் காணப்படும்.
வினிகரின் சிறப்பு வினிகரில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இவை சீக்கிரம் வயதாகுவதை தடுத்து ஆரோக்கியமான உடல் நலத்தை தருகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சளி உங்களுக்கு சளித்தொல்லை, இருமல் இருந்தால் வெறும் நீரில் தேன், இஞ்சி சாறு கலந்து குடித்தாலே போதும். சளித்தொல்லை அகலும். வினிகர் வீட்டை தூய்மை செய்ய, சீரண சக்தியை மேம்படுத்த போன்ற பல நன்மைகளை தருகிறது.
ஆர்த்ரிட்டீஸ்
நமது தாத்தா பாட்டிகள் தங்கள் கால்வலி மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இரண்டு விதமான பொருட்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளனர். உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இதையும் மேற்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள் வினிகர் மற்றும் தேனில் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளன. இவை மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும். ஏனெனில் இதிலுள்ள கால்சியம் எலும்பை வலிமையாக்குகிறது. பொட்டாசியம் எலும்பானது கால்சியத்தை உறிஞ்சி கொள்ள உதவுகிறது. ஆர்த்ரிட்டீஸ் ஏற்பட மற்றொரு காரணம் சீரண சக்தியின்மை. வினிகர் மற்றும் தேனில் உள்ள என்சைம் மற்றும் பெக்டின் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மூட்டுகளில் நச்சுக்கள் தங்குவதாலும் இந்த ஆர்த்ரிட்டீஸ் பிரச்சினை ஏற்படுகிறது. மூட்டு வலி இருப்பவர்கள் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம். இது வலியை அதிகரிக்கும். அதற்குப் பதிலாக வினிகரை பயன்படுத்தலாம். வினிகரில் உள்ள பெக்டின் நச்சுக்களை ஊறிஞ்சி வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தி விடுகிறது.
வினிகர் தேன் டானிக்
நீங்கள் வினிகரை தேர்ந்தெடுக்கும் போது சுத்தமான ஆர்கானிக் மற்றும் பதப்படுத்தப்படாத வினிகரை பயன்படுத்துங்கள். ஆப்பிள் சீடர் வினிகரை பார்த்து வாங்கும் போது நல்ல சிவப்பு நிறம் பாட்டிலை சுற்றி மிதக்கும் இதை பார்த்து வாங்கவும். இவை சீரண சக்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. வினிகர் மாத்திரை வடிவிலும் இப்பொழுது கிடைக்கிறது.ஆனால் இதன் வீரியம் மிகவும் குறைவு. தயாரிக்கும் முறை கொஞ்சம் சுத்தமான தண்ணீரை மிதமாக கொதிக்க விடவும். அதில் 2 டீ ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேருங்கள். நன்றாக கலக்குங்கள். இதை சில வாரங்களுக்கு என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள்
தொண்டை புண்
யாருக்கும் சில்லென்ற ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காமல் இருக்காது. அதிலும் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் என்ன அடிக்கடி சளி பிடித்து விடுமோ என்ற பயமும் நமக்கு இருக்கும். ஐஸ் கிரீம் சாப்பிட்டதும் முதலில் தொண்டை தான் பாதிப்புக்கு உள்ளாகும். தொண்டை யில் ஏற்படும் புண்னை சில எளிய முறையைக் கொண்டே சரி செய்து விடலாம். இதற்கு எந்த பக்க விளைவுகளும் இல்லாத வினிகர் மற்றும் தேன் கலவையே அருமருந்து. பயன்கள் வினிகர் நமது தொண்டையின் pH அளவை கட்டுப்பாட்டில் வைத்து வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள பிரிபயோடிக் இன்சுலின் டி-செல்களின் எண்ணிக்கை மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து தொண்டை புண்ணை ஆற்றி எச்சிலை விழுங்க வைக்கிறது. மூச்சு விட எளிதாக்குகிறது. பயன்படுத்தும் முறை சம அளவு வினிகர் மற்றும் தேனை சூடான நீரில் கலந்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தொண்டையில் படும் படி கொப்பளிக்க வேண்டும். இதை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என திரும்பவும் செய்யவும். இப்படி செய்து வந்தால் தொண்டை யில் உள்ள பாக்டீரியாவை அழித்து நிவாரணம் அளிக்கும்.
முறை : 2 ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் உப்பு
2 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் கொஞ்சம் உப்பு இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் தொண்டை யில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உப்பு, வினிகர், மிளகு இவற்றையும் 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கலாம்.
இருமல்
உங்களுக்கு விடாமல் இருமல் இருந்தால் அதற்கு இந்த ரெசிபி பயனுள்ளதாக அமையும்.
தேவையான பொருட்கள்
  • 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
  • 2 டேபிள் ஸ்பூன் தேன்
  • 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
  • 1/4 டீ ஸ்பூன் மிளகு
  • 1/4 டீ ஸ்பூன் இஞ்சி
பயன்படுத்தும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு குலுக்கவும். அப்படியே அதை அறை வெப்பநிலையில் விடவும். இது ஒரு மிதமான பதத்தில் இப்பொழுது இருக்கும். இந்த சிரிப்பை குடித்து வந்தாலே போதும் உங்கள் இருமல் பறந்தோடி விடும். எனவே இனி இந்த இரண்டு பொருளை உங்கள் கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். ஏராளமான பலன்களை பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக