மூலநோயின் உருவாக்கம் மற்றும் மூல நோயின் வகைகள்
மனித உடலில் கீழ் குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மலவாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில நேரங்களில் வலி முதலிய செய்கைகளை உண்டாக்குவது மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.
மலம் கழிக்கச் செல்லும்போது மலத்தை இறுகச் செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும். நாமே முயற்சி செய்து மலத்தை வெளியாக்க முயலும்போது நீர் வறண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும்.

மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எச்சல், நமைச்சல், அப்பு வீக்கம் முதலியவையையும் உண்டாக்கும்.
மூலநோய் எதனால் வருகிறது
கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச் செய்து இந்த நோயினை உண்டாகும்.
கிழக்கு வகைகளை அதிகம் உட்கொள்வதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும், உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் மூல நோய் வரலாம்.
மலவாயை உறுத்தும்படி எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டகம் இவற்றில் சவாரி செய்வதாலும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை உட்கொள்வதாலும் வரலாம்.
யோக நிலையில் தன்னுடைய உடலின் தன்மைக்கும், வன்மைக்கும் அதிகமாக நிலைத்திருந்தல் காரணமாகவும், அதிக நேரம் மூச்சை அடக்குவதன் காரணமாகவும் இந்த நோய் வரக்கூடும்.
மேலும் பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகத்து மூச்சூடு உண்டாகி மலத்தை வெளியில் போகாத படி அடக்கி மலவாயில் அனலை அதிகம் உண்டாக்கி இந்த நோய் உண்டாகும்.

மேலும் வாயுவைப் பெருக்கக் கூடிய உணவுகளாலும், செயல்களாலும் மலபபாதை கெட்டு மலத்தை இறுகச் செய்து மலம் வெளிவராதபடி செய்யும்.
மலவாய் எச்சல், விந்து கெடுதல், வயிறு இரைதல், வயிறு நொந்து கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர்வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல் போன்ற நிலைகளை உண்டாக்கும்.
சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.
சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.
புண் மூலம்: மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.
தீ மூலம்: மலவாயிலிருந்து சூட்டுடன் எச்சல் கூடி கழிவது.
நீர் மூலம் : மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.
முளை மூலம்: மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.
சதை மூலம்: காய்போல முளை கடுப்போடு வெளியாவது.
வெளுப்பு மூலம்: மோர்போல் வெளுத்து சிறுகச் சிறுக வெளியாவது.
காற்று மூலம்: அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.
பெருமூளை மூலம்: கீழ்க்குடல் கருணைக் கிழங்கின் முளைபோல் ஆடுவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக